|
இந்த இட்டுக்கட்டப்பட்ட
பலஹீனமான செய்தியை அறியாமையினால் பின்பற்றி
நடந்ததற்கும், பிரச்சாரம் செய்ததற்கும் வெட்கமும்,
வேதனையும் அடைகின்றோம். அல்லாஹ்விடம் பாதுகாப்பும்
கோருகின்றோம். தத்தம்பகுதி பிறை,
சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற எத்தகைய பிறை
நிலைபாடுகளுக்கும் வாகனக் கூட்டம் அறிவிப்பு எக்காலமும்
ஆதாரமாகாது என்பதை மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.
மேலும்...
|
|
தமிழக முஸ்லிம்களைப் பொருத்தவரையில் சுன்னத்
ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர், தப்லீக்
ஜமாஅத்தினர், ஸலஃபு ஸாலிஹீன்களைப் பின்பற்றுவோர் என்று
பல்வேறு பிரிவினராய் பிரிந்துள்ளனர். அனைத்து
பிரிவினரும் இப்பிறை விஷயத்தில் ஒத்தக்கருத்திற்கு
வந்து ஓரணியாக ஆகிவிடவேண்டும் என்றே நாம்
ஆசைப்படுகிறோம்.
மேலும்... |
|
இருசாரரையும்
ஒன்றுகூட்டி அமரன்னாஸ் என்பதும் அமரஹூம்
என்பதும் ஒன்றுதான். அச்சொல்லை பிரிக்கத்
தேவையில்லை என்று அவர்களுக்கு அறிவுறுத்தி
அவர்களை ஒர் அணியாக ஆக்கட்டும். அதன்
பிறகு வாகனக்கூட்டம் அறிவிப்பு ஸஹீஹானது
என்பதற்கு அவர்கள் துணையுடனேயே ஆதாரங்களை
நமக்குத் தரட்டும்.
மேலும்... |
|
இவர்கள்
உண்மையிலேயே நமக்கு பதில் கூறுவதாக
இருந்தால், ஹிஜ்ரி கமிட்டியினரே அபூஉமைர்
ரிவாயத்தையும், முர்ஸலான அறிவிப்பையும்
விடுங்கள். இதோ எங்களிடம் அடுக்கடுக்கான
ஸஹீஹான ரிவாயத்துக்கள் இந்த வாகனக்கூட்டம்
சம்பந்தமாக இருக்கின்றன என்று பலமான
ஆதாரங்களை அள்ளித்தர வேண்டியதுதானே.
மேலும்...
|
|
விமர்சனத்தை
அல்லவா கவனத்தில் எடுக்கவேண்டும்? ஒரு
அறிவிப்பாளர் பற்றி புகழ்ந்தும்,
விமர்சித்தும் இருவேறு கருத்துக்கள்
வந்துவிட்டால் அறிவிப்பாளர் பற்றிய
விமர்சனத்திற்குத்தான் முதலிடம்
கொடுக்கவேண்டும் என்பது மிகஅடிப்படையான
சட்டமல்லவா? இப்போது கூறுங்கள் யாருக்கு
ஹதீஸ்கலை தெரியவில்லை என்று?
மேலும்... |
|
நபி (ஸல்) அவர்கள், மக்கத்து குறைஷி தாருந்நத்வா அறிஞர்களிடம்
இறைச்செய்தியை எடுத்துரைத்தபோது அபூஜஹிலும் அவனுடைய
கூட்டாளிகளும் நபிகளாருக்கு சவால்விட்டு இதே அரபிமொழி
இலக்கணப் பெருமையைத்தான் பேசினார்கள் என்பதை கவனத்தில்
கொள்ள வேண்டுகிறோம். உண்மையை மறைத்து பல பொய்களை
இட்டுக்கட்டி சத்தியத்தை எதிர்த்ததால் அவர்கள்
அனைவரும் அழிந்தொழிந்தனர் என்பது மறக்கவியலாத வரலாறு.மேலும்... |