முதல் பக்கம்

திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கட்டுரைகள்

வரலாறு

கேள்வி பதில்

தமிழ் குர்ஆன்

   

 

Go To Index      

பிறையும் புறக்கண்ணும்!!!

ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?

பகுதி : 9

8. பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது மார்க்க நிபந்தனையா?

இன்னும் சிலர் மேற்கண்ட ஹதீஸின் லாதஸூமூ ஹத்தா தரவுல் ஹிலால் வலா தப்ஃதிரு ஹத்தா தரவ்ஹூ- என்ற வாக்கியத்தை மட்டும் வைத்துக் கொண்டு ரமழானுக்காக பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்ப்பது என்பது ஷரத்து (நிபந்தனை), கண்ணால் பார்ப்பது என்பது ஒரு கண்டிஸன். எனவே பிறந்த பிறையை பார்ப்பது என்பது ஒரு வஸீலா வழிமுறை அல்ல என்று மக்கள் மத்தியில் தவறான செய்தியை பிரச்சாரமாக வைக்கின்றார்கள். மேலும் பிறந்த பிறையை கண்ணால் பார்ப்பது என்பது கட்டாயம் அதனால்தான் லா - ஹத்தா என்ற வார்த்தைகள் உபயோகிக்கப்பட்டுள்ளன. பஸ் டிக்கட் எடுக்காமல் பஸ்ஸில் பிரயாணம் செய்யக்கூடாது. இது நடக்காமல் அது நடக்கக்கூடாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இதில் நாம் என்ன கேட்கிறோம் என்றால் மேகமூட்டத்தைக் காரணம்காட்டி 29 நாட்கள் கொண்ட ஒரு மாதத்தை 30 நாட்களாக ஆக்கும்போது இதே பஸ் டிக்கட் கதையின் நிலை என்ன? அப்போது மட்டும் பிறையைப் புறக்கண்களால் பார்ப்பது என்பது 'ஷரத்து' (நிபந்தனை), கண்ணால் பார்ப்பது என்பது ஒரு 'கண்டிஸன்' என்ற பிடிவாதங்கள் தளர்ந்து விடுவதேன்?. 30-வது நாள் பிறைப்பார்க்கத் தேவையில்லை என்று எந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதை இவர்கள் மக்கள் மன்றத்தில் காட்டுவார்களா?

பயணச்சீட்டு எடுக்காமல் பேருந்தில் பிரயாணம் செய்யக்கூடாது என்பதை நாமும் ஒப்புக்கொள்கிறோம். அது பேருந்து பயணத்திற்கும், பயணச்சீட்டிற்கும் இந்த உதாரணம் ஒத்துப்போகும். ஆனால் பிறந்த பிறையை அறிந்து கொள்வதற்கு இந்த உதாரணம் பொருந்தாது என்கிறோம்.

காரணம் ரமழான் மற்றும் பெருநாட்களை தீர்மானிப்பது என்பது மார்க்கம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை அனைவரும் அறிந்தே வைத்துள்ளோம். எனவே மார்க்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு குர்ஆன் சுன்னாவிலிருந்துதான் தெளிவான ஆதாரத்தைத் தரவேண்டும். பஸ் டிக்கட் உதாரணங்கள் எங்களுக்குத் தேவையில்லை என்கிறோம்.

மேலும் மேற்படி ஆலிம்கள் எனப்படுவோர் பிறந்த பிறையை மேற்குத்திசையில் மஃரிபு நேரத்தில் 29-வது நாள் பின்னேரம் என்ற அந்த ஒரு நாள் மட்டும் புறக்கண்ணால் (அல்லது தொலை நோக்கியால்) பார்த்து மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்கின்றனர். மாற்றுக் கருத்துடையோரின் இந்த நம்பிக்கையின்படி புறக்கண்ணால் பிறை பார்த்தல் என்பது ஷரத்து (நிபந்தனை) என்பதும், புறக்கண்ணால்

பார்ப்பது என்பது ஒரு கண்டிஸன் என்பதும் மார்க்கம் என்றிருந்தால்...

• இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 29-வது நாள் பின்னேரம் என்ற அந்த ஒருநாள் மட்டும் பிறையை பார்த்திருக்க வேண்டும்.

• அதுவும் மேற்குத் திசையில் மஃரிபு நேரத்தில் புறக்கண்களால் பிறையை பார்க்குமாறு இந்த உம்மத்திற்குக் கட்டளையிட்டிருக்க வேண்டும்.

• அவ்வாறு பிறந்த பிறையைப் புறக்கண்ணால் தானும் பார்த்து, பிறரையும் தவறாது பார்த்து வரவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி இருக்க வேண்டும்.

• இன்னும் பிறந்த பிறையைப் பார்த்து வருவது முஸ்லிமான ஒவ்வொரு ஆண் பெண் மீதும் கடமையான விதியாக ஆக்கி இருக்க வேண்டும்.

இதில் ஒன்றைக்கூட நபி (ஸல்) அவர்கள் செய்யவில்லையே ஏன்? நபி (ஸல்) அவர்களே செய்யாத போது மார்க்கத்தில் இல்லாத ஒரு நிபந்தனையை மார்க்கத்தின் பெயரால் புகுத்தி முஸ்லிம்களை கட்டாயப்படுத்துவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்கிறோம்.

حدثنا أبو اليمان أخبرنا شعيب عن الزهري قال عروة بن الزبير قالت عائشة رضي الله عنها  …………… ثم قام النبي صلى الله عليه و سلم من العشي فأثنى على الله بما هو أهله ثم قال ( ما بال أناس يشترطون شروطا ليس في كتاب الله من اشترط شرطا ليس في كتاب الله فهو باطل وإن اشترط مائة شرط شرط الله أحق وأوثق ) صحيح البخاري - (2 / 756) 2047 - ]

பின்னர் இஷாவில் நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே (உரையாற்ற) எழுந்து நின்று, அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி, அவனைப் புகழ்ந்துரைத்துவிட்டு, 'சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை எல்லாம் விதிக்கிறார்களே! அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனை எதுவாயினும் அது செல்லாததாகும். அவர்கள் நூறுமுறை நிபந்தனையிட்டாலும் சரியே. அல்லாஹ்வின் தீர்ப்பே பின்பற்றத் தக்கதாகும். அல்லாஹ்வின் நிபந்தனையே உறுதியானதும் (கட்டுப்படுத்தக் கூடியதும்) ஆகும். வாரிசுரிமை விடுதலை செய்தவருக்கே உரியதாகும்' என்று கூறியதாக ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள். நூல்: புகாரி 2047, 2729.

குர்ஆனுக்கு எதிராகவும், நபிவழிக்கு எதிராகவும், நூறு நிபந்தனைகளைக் கூறி மக்களை பிறை விஷயத்தில் குழப்பும் இயக்கங்கள், ஜமாஅத்துகள், அரசாங்கங்கள் மற்றும் தலைவர்கள் மேலே சுட்டிக்காட்டியுள்ள நபிமொழியை ஒன்றுக்கு பலமுறை படித்துப்பார்த்து தங்களை திருத்திக் கொள்ளுமாறு உபதேசிக்கிறோம். பிறையை பார்க்கச் சொல்லி மக்களுக்குக் கட்டளையிடுபவர்கள் இவ்வாறு பிறருக்கு உபதேசிக்கும் முன்னர் முதலில் அவர்கள் பிறைகளை பார்த்து வருவதற்கோ, அதற்காக முயற்சி எடுப்பதற்கோ முன் வராதது ஏனோ?

எனவே பிறைகளை பார்ப்பது என்பது இறைவனின் நாட்காட்டியான பிறையின் படித்தரங்களை அவதானித்து அறிந்துகொள்ளும் ஒருவழிமுறைதானே தவிர அது கட்டாயக் கடமையல்ல என்பதை மக்களே நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று பேசும் அறிஞர்களில் எத்தனை பேர் அவ்வாறு பிறைகளை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்? அல்லாஹ்விற்காக அவர்கள் நெஞ்சத்தில் கைவைத்து சொல்லட்டும்.
 

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்....
 நன்றி : இந்திய ஹிஜ்ரி கமிட்டி

Website : www.mooncalendar.in

[பதிவேற்றிய நாள் : 27-07-2013]
 

 


 

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved