முதல் பக்கம்

திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கட்டுரைகள்

வரலாறு

கேள்வி பதில

தமிழ் குர்ஆன்

   

 

Go To Index      

பிறையும் புறக்கண்ணும்!!!

ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?

பகுதி : 8

யூதர்களுக்கு மாறு செய்வோம்.

ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கம தினத்தில் (Conjunction Day) பிறை பிறந்து அதற்கு அடுத்த நாளான புதிய மாதத்தின் முதல் நாளில் மேற்குத்திசையில் மஃரிபு வேளையில் அது மறையும்போது காட்சியளிப்பதை அறியாமல், அந்த முதல் நாளின் மறையும் பிறையை புறக்கண்களால் பார்த்துவிட்டு இரண்டாவது நாளை முதல்நாளாகக் கொள்ளும் இந்த பழக்கம் யூதர்களின் வழிமுறையிலிருந்து பிறந்ததாகும்.

யூதர்கள்தான் தங்களுடைய ஹீப்ரு காலண்டரின்படி ஒருநாளின் துவக்கத்தை சூரியன் மறைந்தபின்னர் மஃரிபு வேளையிலிருந்து ஆரம்பிக்கின்றனர். இஸ்லாத்தின் பரம விரோதிகளான யூதர்கள் இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் செய்யத் துணிந்த குழப்பங்களை நாம் விளக்கித்தான் உங்களுக்குத் தெரியவேண்டும் என்பதில்லை.

திருக்குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் போதனைகளின் படி முஸ்லிம்கள் தங்களுடைய நாளை ஃபஜ்ரு வேளையிலிருந்து துவங்கவேண்டும். இதை நாம் பலமுறை மக்களுக்கு விளக்கி விட்டோம். முஸ்லிம்களின் மானம் உயிர் உடைமைகளை தொடர்ந்து சூறையாடிக் கொண்டிருக்கும் அத்தகைய யூதர்களுக்கு மாறு செய்யவேண்டியது நமது கடமையாகும். அந்த யூதர்களைப் போல இன்றைய முஸ்லிம்களும் ஒருநாள் என்பது மஃரிபிலிருந்தே ஆரம்பமாகின்றது என்று தவறாக விளங்கி அதையே சரிஎன்று நம்பியுள்ளதை பார்க்கிறோம். மறுமைநாள் நெருங்கும் வேளையில் முஸ்லிம்கள் யூத கிருஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு-ஜான் முழத்திற்கு-முழம் பின்பற்றத் துவங்குவார்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையையும் இத்தருணத்தில் மனதில் கொள்ள வேண்டுகிறோம்.

நீங்கள்; உங்கள் முன்சென்றவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யூதர்களும் நஸாராக்களுமா என்று நாம் கேட்டோம்? அதற்கு அவர்களல்லாமல் வேறு யாராக இருக்கமுடியும். என அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். நூல்: முஸ்லிம் 6952

யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் வழி - அதுவே நேர்வழி என்று சொல்லும்;. அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை
. (அல்குர்ஆன் 2:120)

இஸ்லாமிய வரலாற்றில் மேற்கண்ட எச்சரிக்கையை உணராத ஷியாக்கள்தாம் யூதர்களின் சூழ்ச்சியில் வீழ்ந்தனர். இஸ்லாமிய மார்க்கத்தில் பல்வேறு குழப்பங்களை உண்டாக்கினர். அத்தகைய குழப்பங்களில் ஒன்றுதான் பிறந்த பிறையை புறக்கண்களால் பார்த்தபிறகே முதல்நோன்பை ஆரம்பிக்க வேண்டும் என்பதும், பிறந்த பிறையை புறக்கண்களால் பார்த்தபிறகே பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்பன போன்ற பித்அத்துகளுமாகும். ஃபத்ஹூல்பாரியில் இடம்பெறும் நீளமான அந்த வரலாற்றுச் சுவடின் சுருக்கத்தை இங்கே தருகிறோம்.

 அன்றைய ஷியா எதிர்ப்பு அறிஞர்கள் இவ்வாறு பிறந்த பிறையை பார்த்துவிட்டு அமல்செய்வதில்லை என்று அன்றையகால ஷியாக்கள் லாத்தஸூமூ என்னும் மேற்காணும் ஹதீஸை ஆதாரமாக் காட்டியே வாதிட்டனர். ஒரு நாளை ஜவ்வால் என்னும் நண்பகலிலிருந்து கணக்கிடுவதா, அதன்பின்னர் கணக்கிடுவதா என்றதொரு பிரச்சனையைக் கிளப்பினர். இன்று மக்களிடையே புறையோடிப் போய்விட்ட மஃரிபுக்குப் பின்னர்தான் ஒருநாளை துவங்கவேண்டும் என்ற யூதர்களின் வழிமுறையை ஷியாக்கள் நடைமுறைக்குக் கொண்டுவர எடுத்த முயற்சிகளை அன்றைய ஷியா எதிர்ப்பு அறிஞர்களின் (இஜ்மா) ஆலோசனைப்படி நிராகரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஃபத்ஹூல்பாரியின் ஆதாரத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
 

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்....
 நன்றி : இந்திய ஹிஜ்ரி கமிட்டி

Website : www.mooncalendar.in

[பதிவேற்றிய நாள் : 26-07-2013]
 

 


 

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved