முதல் பக்கம்

திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கட்டுரைகள்

வரலாறு

கேள்வி பதில

தமிழ் குர்ஆன் மென்பொருள்

   

Go to Index   

தமிழில் : அபு இஸாரா

 

கேள்வி எண்: 24
இறைவன், 'காஃபிர்களின் (நிராகரிப்பவர்களின்) இதயங்களில் முத்திரை வைத்துவிட்டேன். ஆகவே அவர்கள் விசுவாசம் கொள்ள மாட்டார்கள்.' என்கிறான். செய்திகளை புரிந்து கொண்டு - விசுவாசம் கொள்வதற்கு காரணமாக அமைவது - மனிதனின் மூளையேத் தவிர - மனிதனின் இதயம் அல்ல என்பது இன்றைய அறிவியல் நமக்கு கற்றுத் தரும் பாடம். மேலே சொல்லப்பட்ட குர்ஆனிய வசனம் அறிவியல் உண்மைக்கு முரணானது இல்லையா?.

பதில்:

அருள்மறை குர்ஆனின் 2வது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 6 மற்றும் 7வது வசனங்கள் கீழ் கண்டவாறு கூறுகின்றன:
நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள். அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்களின் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்து விட்டான்: இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது: மேலும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. (2: 6)\

2. அரபி வார்த்தையான 'கல்ப்' என்பதற்கு அறிவுத்திறன் என்றும் பொருள் உண்டு.
மேற்படி அருள்மறை வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அரபி வார்த்தையான 'கல்ப்' என்பதற்கு இதயம் என்ற பொருள் தவிர, அறிவுத்திறன் என்றும் பொருள் உண்டு. எனவே மேற்கண்ட வசனத்திற்கு அல்லாஹ் - இறை நிராகரிப்பாளர்களின் -அறிவுத்திறன் மீது முத்திரையிட்டு வி;ட்டான் எனவே அவர்கள் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள் - இறை நம்பிக்கை கொள்ளவும் மாட்டர்கள் - என்று பொருள் கொள்வதே சரியானதாக இருக்கும்.

3. அரபி மொழியில் இதயம் என்பதற்கு புரிந்து கொள்ளக்கூடிய மையம் என்றும் பொருள் கொள்ளலாம்.
அரபி மொழியில் ஒருவரின் புரிந்து கொள்ளக்கூடிய மையத்தை குறிப்பிடுவதற்கு 'கல்ப்' (இதயம்) என்ற வார்த்தையையும் பயன்படுத்துகிறார்கள்.

4. ஆங்கில மொழியில் ஏராளமான வார்த்தைகள் - எழுத்தில் ஒரு அர்த்தத்தைக் கொண்டிருந்தாலும் - அவைகளை பயன்படுத்தும் போது மாற்று அர்த்தத்தை தரக்கூடிய வார்த்தைகள் ஏராளம் உள்ளன.
ஆங்கிலத்தில் 'லுனாடிக்'
 (Lunatic) என்ற வார்த்தை நிலவு சம்பந்தப்பட்டது ஆகும். ஆனால் மேற்படி வார்த்தை இன்றைக்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. நிலவுக்கும் - மன நலம் பாதிக்கப்பட்டவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும் மன நலம் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை செய்யக் கூடிய மருத்துவர் கூட மேற்படி வார்த்தையை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை பார்க்கிறோம். மொழிப் பரிணாமத்தில் இது போன்ற நிகழ்வுகள் என்பது சாதாரணம்.

டீ. டிஸ்ஆஸ்டர் (Disaster) என்பது ஒரு நட்சத்திரம்.
ஆங்கிலத்தில் டிஸ்ஆஸ்டர் (Disaster)  என்றால் ஒரு தீய நட்சத்திரம். ஆனால் மேற்படி வார்த்தை இன்றைக்கு திடீரென தோன்றும் ஒரு துர்அதிர்ஷ்டம் அல்லது பெருந்துயரம் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. டிஸ்ஆஸ்டர் (Disaster)  என்ற நட்சத்திரத்திற்கும், பெருந்துயரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம்.

ஊ. டிரிவியல் (Trivial) என்ற ஆங்கில வார்த்தைக்கு மூன்று சாலைகள் சந்திக்கும் இடம் என்று பொருள்.டிரிவியல் (Trivial)  என்ற ஆங்கில வார்த்தைக்கு மூன்று சாலைகள் சந்திக்கும் இடம் என்று பொருள். ஆனால் மேற்படி வார்த்தை இன்றைக்கு முக்கியத்துவம் இல்லாத விஷயங்கள் என்ற பொருளில் பயன் படுத்தப்படுகிறது. டிரிவியல் (Trivial) என்ற ஆங்கில வார்த்தைக்கும் - முக்கியத்தவம் அல்லாத விஷயங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லi என்பது நாம் அனைவரும் நன்றாக அறிவோம்.

னு. சன்ரைஸ் (Sunrise) மற்றும் சன்செட் (Sunset) சன்ரைஸ் (Sunrise) என்றால் நேரடி பொருள் கொள்வதாக இருந்தால் சூரியன் மேலெழுவது என்று பொருள் கொள்ள வேண்டும். ஆனால், சூரிய உதயத்தின் போது உண்மையிலேயே சூரியன் மேலெழுகிறதா என்றால் - இல்லை. மாறாக பூமி சுழல்வதால் உள்ள மாற்றத்தால் சூரியன் மேலெழுவது போன்றும் - சூரியன் மறைவது போன்றும் தெரிகிறதேத் தவிர, உண்மையில் சூரியன் மேலெழுவதோ அல்லது மறைவதோ இல்லை. இருப்பினும் இன்றைக்கும் நாம் சன்ரைஸ் (Sunrise) மற்றும் சன்செட் (Sunset) என்கிற ஆங்கில வார்த்தைகளை சூரியன் மெலெழுவது - சூரியன் மறைவது போன்ற பொருளில்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

5. ஆங்கில மொழியில் இதயம்தான் அன்பு செலுத்துவதற்கும் - உணர்ச்சிவயப் படுவதற்கும் மையமாக கருதப்படுகிறது.
ஆங்கில மொழியில் Heart அதாவது இதயம் என்றால் இரத்தத்தை ஓடச் செய்யும் ஓர் உடலுறுப்பு என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஆனால் Heart அதாவது இதயம் என்கிற வார்த்தை நினைப்பதற்கும், அன்பு செலுத்துவதற்கும், உணர்ச்சி வயப்படுவதற்கும் உரிய மையம் என்ற பொருளில் பயன் படுத்தப்படுகிறது. இன்றைக்கு நினைப்பதற்கும், அன்பு செலுத்துவதற்கும், உணர்ச்சி வயப்படுவதற்கும் பயன்படக்கூடிய மனித உறுப்பு மூளை என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும், தனது உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பும் மனிதன், 'நான் உன்னை எனது இதயத்தின் அடிப்பகுதியிலிருந்து விரும்புகிறேன்,' என்று சொல்லக் கேட்கிறோம். உதாரணத்திற்கு ஒரு அறிவியல் அறிஞர் தனது மனைவியிடம் 'நான் உன்னை எனது இதயத்தின் அடிப்பகுதியிலிருந்து விரும்புகிறேன்,' என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே அவரது மனைவி சொல்கிறார்,' உங்களுக்கு அடிப்படை அறிவியல் அறிவு கூடக் கிடையாதா?. அன்பு செலுத்துவது மூளையேத் தவிர, இதயம் இல்லை?. நீங்கள் உங்கள் மூளையின் அடிப்பகுதியிலிருந்து என்னை விரும்புவதாகத்தான் சொல்லியிருக்க வேண்டும்?.என்று பதிலளித்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

5. 'கல்ப்' அதாவது இதயம் என்பதற்கு சிந்திப்யதற்கும், உணர்ந்து கொள்வதற்கும் உரிய மையம் என்ற பொருள் என்பது அரபிமொழி தெரிந்த அனைவரும் அறிந்ததே.
'கல்ப்' அதாவது இதயம் என்பதற்கு சிந்திப்யதற்கும், உணர்ந்து கொள்வதற்கும் உரிய மையம் என்ற பொருள் என்பதை அரபி மொழி அறிந்தவர்கள்; தெரிந்திருப்பதால் அல்லாஹ் ஏன் நிராகரிப்பவர்களின் இதங்களில் முத்திரை வைத்து விட்டேன் என்கிறான் என்ற கேள்வியை அரபி மொழி அறிந்த எவரும் கேட்பதில்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
மாற்று மதங்களிலிருந்து விடுபட்டு சத்திய இஸ்லாத்தை தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ளும் கோடானுகோடி சதோதர சகோதரிகளில் ஒரு சிலர்...

 

Six Christian Sisters...

Loading...

Download this video

 

An Indian Girl

Loading...

Download this video

Atheism to Islam

Loading...

Download this video

A Mexican Christian

Loading...

Download this video

Ilayaraja became AbdRahman

Loading...

Download this video

 

 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved