முதல் பக்கம்

திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கட்டுரைகள்

வரலாறு

கேள்வி பதில

தமிழ் குர்ஆன் மென்பொருள்

   

Go to Index   

தமிழில் : அபு இஸாரா

 

கேள்வி எண்: 15
மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்?

பதில்:
மனிதனுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் - சமுதாயத்தின் கொள்ளைநோயாக இருந்து வருவது போதை தரும் இந்த மது பானங்கள். உலகம் முழுவதும் உள்ள மனித சமுதாயத்தின் அழிவு என்னும் பெருந்துயருக்கு காரணமாக அமைந்திருப்பது இந்த மது பானங்கள். இன்று மனித சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒட்டு மொத்த பிரச்னைகளுக்கும் ஆணிவேராக அமைந்திருப்பது இந்த மது பானங்கள். உலகில் பல்கிப் பெருகி வரும் குற்றங்களுக்கு காரணமாகவும் மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வருவதும் மக்களின் உளச்சோர்வுக்கு காரணியாகவும் அமைந்திருப்பது இந்த மதுபானங்களின் அழிக்கும் சக்திதான்.

அல்-குர்ஆன் மதுபானத்தை தடை செய்துள்ளது:

அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 90வது வசனத்தின் மூலம் அல்லாஹ் மதுபானம் அருந்துவதை தடைசெய்துள்ளான்:
'விசுவாசம் கொண்டவர்களே!. மதுபானமும் சூதாட்டமும் கற்சிலைகளை வழிபடுதலும் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும்: ஆகவே இவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.'
(அல்-குர்ஆன் அத்தியாயம் 05 - வசனம் 90)

மது அருந்துவதை பைபிளும் தடை செய்கிறது:
பைபிளின் 20வது அத்தியாயம் Proverbs உடைய 01வது வசனமும் 5வது அத்தியாயம் Ephesians உடைய 18வது வசனமும் மது அருந்துவது சிறந்தது அல்ல என குறிப்பிடுகின்றன.

மனித மூளையின் தடை செய்யும் மையத்தை (Inhibitory Centre) - இயங்க விடாமல் செய்கிறது மது பானங்கள்:
மனித மூளையில் தடை செய்யும் மையம் (Inhibitory Centre) என்ற ஒரு பகுதி உள்ளது. மனிதன் தான் செய்யும் செயல் தவறு என்று எண்ணும் செயல்களை செய்ய விடாமல் தடுப்பது மேற்படி தடை செய்யும் மையத்தின் பணி. உதாரணத்திற்கு தனது பெற்றோரையோ அல்லது தனக்கு மூத்தவர்களையோ கெட்ட வார்த்தைகளால் ஏசக்கூடாது என்று ஒரு மனிதனைத் தடுப்பது தடை செய்யும் மையத்தின் வேலை. ஓரு மனிதன் தன் இயற்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள விரும்பினால் - அதனை பொது இடத்தில் செய்யக் கூடாது என்று தடுப்பது தடை செய்யும் மையத்தின் வேலை. போதையிலிருக்கும் ஒரு மனித மூளையின் தடை செய்யும் மையத்தின் பணி மது பானங்களால் தடை செய்யப்படுகிறது. எனவேதான் குடிபோதையில் இருக்கும் மனிதன் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் தன் மனம் போன போக்கில் செயல் படுகிறான். குடிபோதையில் இருக்கும் மனிதன் தனது பெற்றோரைக் கூட மோசமான வார்த்தைகளால் ஏசுவதும் அவர்களிடம் மோசமாக நடந்து கொள்வதையும் நாம் காண்கிறோம். போதையில் இருப்பவர்கள் தம் ஆடைகளிலேயே சிறு நீர் கழிப்பதையும் - சரியாக நடக்கவோ அல்லது பேசவோ முடியாமல் இருப்பதையும் பார்க்கிறோம்.

குடிப்பழக்கம் உள்ளவர்கள் விபச்சாரம் வல்லுறவு கொள்ளுதல் தகாதவர்களிடம் உடல் உறவு கொள்ளுதல் எய்ட்ஸ் போன்ற குற்றங்களைச் செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
1996 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2713 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்ததாக அமெரிக்க நீதித்துறையின் ஒரு பிரிவான தேசிய குற்றவியல் புலனாய்வுத்துறை ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் தெரிவித்தது. மேற்படி புள்ளி விபரத்தின்படி வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டோரில் பொரும்பாலானோர் போதையில் இருந்திக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துள்ளது. அது போன்றுதான் சமுதாயத்திற்கு தொல்லை தரும் பலரும் போதை பழக்கத்திற்கு உள்ளானவர்கள் என்பதையும் மேற்படி அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

மேற்படி புள்ளிவிபர அறிக்கையின்படி 8 சதவீத அமெரிக்கர்கள் தகாத உறவு கொள்பவர்களாக இருக்கின்றனர். தகாத உறவு கொள்ளும் குற்றத்தில் ஈடுபடும் அனைவரும் - போதை பழக்கத்திற்கு உள்ளானவர்கள். தகாத உறவில் ஈடுபடும் ஒருவரோ அல்வது இரண்டு பேருமோ போதையில் இருந்திருக்கிறார்கள் என்பதை மேற்படி அறிக்கை தெரிவித்திருக்கிறது.

உலகில் எய்ட்ஸ் என்னும் உயிர்க் கொல்லி நோய் பரவுவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக குடிப்பழக்கம் அமைந்துள்ளது.

குடிப்பழக்கம் உள்ள ஒவ்வொருவரும் ஆரம்பத்தில் 'கௌரவத்திற்காக குடிக்க துவங்கியவர்களே!'
குடிப்பழக்கம் உள்ள பலரும் - மது பானங்களுக்கு ஆதரவாக தங்களை 'கௌரவ குடிகாரர்கள்' என்று அழைத்துக் கொள்வார்கள். தாங்கள் எப்பொழுதும் ஒன்று அல்லது இரண்டு பெக் மாத்திரம் குடிப்பதாகவும் அதனால் தாங்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பதாகவும் தாங்கள் ஒருபோதும் குடிபோதையால் பாதிக்கப்பட்டதில்லை என்றும் வாதிடுவார்கள். ஒவ்வொரு குடிகாரரும் துவக்கத்தில் 'கௌரவ குடிகாரரராகத்தான்' ஆரம்பித்திருக்கிறார் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. எந்த ஒரு குடிகாரரும் - ஆரம்பத்தில் தான் ஒரு மொடாக் குடியனாக வேண்டும் என்ற எண்ணத்தில் குடிக்க ஆரம்பிப்பதில்லை. ஆனால் எந்த ஒரு குடிகாரரும் பல வருடங்களாக குடித்ததில் நான் ஒரு முறை கூட போதையால் பாதிக்கப்பட்டதில்லை - நான் குடித்த எல்லா நாட்களிலும் சுய கட்டுப்பாட்டுடன்தான் இருந்தேன் என நிச்சயமாக சொல்ல முடியாது.

ஓரு குடிகாரர் ஒருநாளாவது குடிபோதையால் பாதிக்கப்பட்டிருந்து - பாதிக்கப்பட்ட அந்த நாளில் அவர் ஒரு மானக்கேடான செயலை செய்திருப்பாரேயானால் - அந்த மானக்கேடான செயல் அவரது வாழ்நாள் முழுவதும் அவரை வாட்டி வதைக்கும்.

உதாரணத்திற்கு ஒரு 'கௌரவ குடிகாரர்' தனது சுய கட்டுப்பாட்டை ஒரு நாளாவது இழந்துவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். குடிபோதையால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நாளில் அவர் ஒரு வல்லுறவு குற்றம் செய்துவிட்டாரெனில் அல்லது ஒருவரிடம் முறைகேடான உறவு கொண்டுவிட்டார் எனில் செய்த அந்த குற்றத்திற்காக அவர் வாழ்நாள் முழுவதும் வருந்த வேண்டிய நிலை உருவாகும். பாதிப்புக்கு உள்ளானவர் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படக் கூடிய நிலையும் - பாதிப்புக்கு உள்ளாக்கியவர் தான் செய்த குற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்வுடன் வாழ வேண்டிய நிலையும் ஏற்படலாம்.

மதுபானங்கள் தடை செய்யப்பட்டவை என்பது நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கும் செய்திகள்:
மதுபானங்கள் தடை செய்யப்பட்டவை என்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கும் செய்திகள் இஸ்லாமிய செய்திப் பேழைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது:
'தீமைகள் அனைத்திற்கும் தாயானது போதையாகும். தீமைகளிலேயே மிகவும் வெட்கக்கேடான தீமை போதையாகும்'
என நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஸுனன் இப்னுமாஜா என்னும் இஸ்லாமிய செய்திப்பேழையின் மூன்றாம் பாகத்தில் -போதைப்பொருட்கள் என்னும் தலைப்பின் கீழ் முப்பதாவது அத்தியாயத்தின் 3371 வது செய்தியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

'அதிக அளவில் பயன்படுத்தினால் போதை தரும் எந்த பொருளும் - குறைந்த அளவில் பயன்படுத்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளத
ு' என நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஸுனன் இப்னுமாஜா என்னும் இஸ்லாமிய செய்திப்பேழையின் மூன்றாம் பாகத்தில் -போதைப்பொருட்கள் என்னும் தலைப்பின் கீழ் முப்பதாவது அத்தியாயத்தின் 3392 வது செய்தியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே அதிகமோ - குறைவோ இஸ்லாத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
மதுபானங்கள் அருந்துபவர்கள் மாத்திரம் இறைவனால் சபிக்கப்பட்டவர்கள் அல்ல. மதுபானங்கள் அருந்துவதில் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவர்கள் அனைவரும் இறைவனால் சபிக்கப்பட்டவர்களே.
1. மதுபானம் தயாரிப்பவன் -
2. யாருக்காக மதுபானம் தயாரிக்கப்பட்டதோ அவன்
3. மதுபானங்களை குடிப்பவன் --
4. மதுபானங்களை விற்பனை கேந்திரங்களுக்கு கொண்டு செல்பவன்
5. யாருக்காக மதுபானங்கள் கொண்டு செல்லப்பட்டதோ அவன்
6. மதுபானங்களை பரிமாறுபவன்
7. மதுபானங்களை விற்பவன்
8. மதுபானங்கள் விற்று வரும் பணத்தை பயன்படுத்துபவன்
9. மதுபானங்களை வாங்குபவன்
10. மதுபானங்கள் யாருக்காக வாங்கப்பட்டதோ அவன்

ஆகிய பத்து சாரார் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்குகிறது.'
என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நபித்தோழர் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஸுனன் இப்னுமாஜா என்னும் இஸ்லாமிய செய்திப்பேழையின் - மூன்றாம் பாகத்தில் - முப்பதாவது அத்தியாயமான போதைப்பொருட்கள் என்னும் தலைப்பின் கீழ் 3380வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

போதைப் பொருட்கள் அதாவது மது பானங்கள் உட்கொள்ளக் கூடாது என்பதற்கு அறிவியல் ரீதியாகவும் ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட நோயின் காரணமாக உலகில் அதிகமான மரணங்கள் நிகழ்கின்றன எனில் - அந்த நோய் மதுபானம் அருந்துவதால்தான் இருக்கும். மதுபானம் அருந்துவதால் உலகில் லட்சக்கணக்கான மக்கள் மரணிக்கிறார்கள். மதுபானம் அருந்துவதால் ஏற்படும் நோய்கள் பற்றி நான் விரிவாக விளக்கத் தேவையில்லை. ஏனெனில் மதுபானம் அருந்துவதால் ஏற்படும் எல்லா நோய்களையும் நாம் அனைவரும் பொதுவாக அறிந்ததுதான். இத்துடன் நான் வரிசைப்படுத்தியிருக்கும் - நோய்கள் - அனைத்தும் போதைப்பொருட்களை பயன்படுத்தவதால் - குறிப்பாக மதுபானங்களை அருந்துவதால் உண்டாகும் நோய்களாகும்.

1. மதுபானங்கள் அருந்துவதால் ஈரலரிப்பு நோய் உண்டாகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
2. மனித உடலின் இரப்பை - தலை - கழுத்து மற்றும் ஈரல் போன்ற இடங்களில் புற்றுநோய் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.
3. இரப்பை அழற்சி போன்ற குடல் சம்பந்தமான நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.
4. இரத்த அழுத்தநோய் - மற்றும் மார்பு வலி போன்ற நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.
5. வாதம் - கைகால் முடக்கம் - வலிப்பு போனற் நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.
6. நரம்பு மண்டலம் பாதிக்கப்படல் - நரம்புத் தளர்ச்சி போன்ற நரம்பு சம்பந்தமான நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.
7. நினைவிழத்தல் - மூளைக் கோளாறு போன்ற மூளை சம்பந்தமான நோய்கள் ஏற்படக் காரணமாக இருப்பது மதுபானங்களே.
8. தோல் வெடித்தல் - தோல் அரிப்பு போன்ற தோல் சம்பந்தமான நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.
9. கை - கால் பதற்றம் - உடல் நடுக்கம் போன்ற நோய்கள் உண்டாக காரணமாக அமைவது மதுபானங்களே.
10. உடலில் பல பகுதியிலும் உள்ள இரத்த நாளங்கள் மற்றும் சுரப்பிகளை செயலிழக்கச் செய்வது மதுபானங்களே.
11. மஞ்சள் காமாலை போன்ற உயிர் கொல்லி நோய்கள் உருவாக காரணமாக அமைவது மதுபானங்களே.
12. மதுபானங்களால் ஆண்களுக்கு ஏற்படும் நோய் மற்றும் பாதிப்புகளைவிட பெண்களுக்கு ஏற்படும் நோய்களும் பாதிப்பும் அதிகம். கருத்தரித்திருக்கும் பெண் மதுபானங்கள் அருந்துவதால் நன்றாக வளர்ந்த கரு கூட பாதிக்கப்படுகிறது. மது அருந்துவதால் கரு பாதிக்கப்பட்ட பெண்கள் ஏராளமான பேரை மருத்துவ உலகம் அடையாளம் கண்டுள்ளது.

இவ்வாறு மது அருந்துவதால் ஏற்படும் நோய்கள் ஏராளம் . தாராளம்.

மது பழக்கம் ஒரு தீய நோய்.
மது அருந்துபவர்கள் மீது தம் தாராள மனப்போக்கை கைவிட்டுவிட்டார்கள் தற்போதைய மருத்துவர்கள். அது ஒரு கெட்ட பழக்கம் என்று அழைக்கப்பட்டது பழங்கதையாகி இப்போது மதுப்பழக்கத்தை ஒரு தீய நோய் என்று அழைக்கிறார்கள்.

மதுப்பழக்கம் ஒரு தீய நோய்
புட்டிகளில் அடைத்து மக்கிடையே விற்கப்படும் ஒரு தீய நோய்
தினசரி செய்தித் தாள்களில் - வாராந்திர மாதாந்திர பத்திக்கைகளில் வானொலியில் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரப் படுத்தப்பட்டு மக்களிடையே பரப்பப்படும் ஒரு தீய நோய்
உரிமம் வழங்கப்பட்ட விற்பனை கேந்திரங்களில் விற்கப்படும் ஒரு தீய நோய்
அரசாங்கத்திற்கு வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய ஒரு தீய நோய்
நெடுஞ்சாலைகளின் கோர மரணங்களுக்கு காரணமான ஒரு தீய நோய்
குடும்ப வாழ்க்கையைச் சீரழித்து சமூகக் குற்றங்கள் அனைத்திற்கும் காரணமான ஒரு தீய நோய்
எந்தவித நோய் எச்சரிக்கையோ - அல்லது நோய்க்கிருமிகள் பற்றிய எச்சரிக்கையோ இல்லாமல் மக்களிடையே பரப்பப்படும் ஒரு தீய நோய் எது என்றால்மதுபானம் என்ற தீய நோயே.
என்பது மதுபானங்களின் பொடுமை பற்றி இஸ்லாமிய ஆய்வு மையம் - மும்பையிலிருந்து வெளியிட்டிருக்கும் ஒரு பிரசுரத்தின் வாசகமாகும்.

மதுபானம் அருந்துவது ஒரு நோய் என்று சொல்வதைவிட அதை ஷைத்தானின் ஊசலாட்டம் என்பதே பொருத்தமாயிருக்கும்:
அல்லாஹ் அருளிய அருள்மறை குர்ஆனில் ஷைத்தானைப் பற்றி அல்லாஹ் நமக்கு எச்சரிக்கை செய்கிறான். இஸலாமிய மார்க்கம் மனிதர்களுக்கு ஏற்ற இயற்கையான மார்க்கமாகும். ஐஷத்தானின் வேலைகள் அனைத்தும் - மனிதனை அவன் செல்லும் சீரான பாதையை விட்டும் தடுத்து கேடான பாதையில் அழைத்துச் செல்வதாகும். போதைக்கு அடிமையாகும் மனிதர்களும் சமுதாயமும் இயற்கைத் தன்மையை விட்டும் மாற்றமாக நடக்கும் சூழ்நிலையை நாம் காண்கிறோம். போதை - மனிதன் இருக்க வேண்டிய நிலையை விட்டும் - அசாதாரண நிலைக்குத் தள்ளப்படுவதையும் நாம் காண்கிறோம். எனவேதான் போதைப் பொருட்கள் உபயோகிப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
மாற்று மதங்களிலிருந்து விடுபட்டு சத்திய இஸ்லாத்தை தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ளும் கோடானுகோடி சதோதர சகோதரிகளில் ஒரு சிலர்...

 

Some Famous People...

Loading...

Download this video

 

Daughter of a Christian Minister

Loading...

Download this video

Christian Catholic Nun

Loading...

Download this video

Madelin From Canada

Loading...

Download this video

Sister Reem From HK

Loading...

Download this video

 

 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved