முதல் பக்கம்

திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கட்டுரைகள்

வரலாறு

கேள்வி பதில

தமிழ் குர்ஆன் மென்பொருள்

   

Go To Index   

தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு

வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா?


பகுதி : 21

இப்புத்தகம் யாருக்குப் பயனளிக்கும்?

தமிழக முஸ்லிம்களைப் பொருத்தவரையில் சுன்னத் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர், தப்லீக் ஜமாஅத்தினர், ஸலஃபு ஸாலிஹீன்களைப் பின்பற்றுவோர் என்று பல்வேறு பிரிவினராய் பிரிந்துள்ளனர். அனைத்து பிரிவினரும் இப்பிறை விஷயத்தில் ஒத்தக்கருத்திற்கு வந்து ஓரணியாக ஆகிவிடவேண்டும் என்றே நாம் ஆசைப்படுகிறோம்.

சுன்னத் ஜமாஅத்தினரைப் பொறுத்தவரையில் குர்ஆன், சுன்னா, இஜ்மா, கியாஸ், மத்ஹபு இமாம்களின் சட்டங்கள், பெரியார்களின் போதனைகள் ஆகியவற்றை இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாக ஏற்று பின்பற்றுகின்றனர். ழயீஃபான ஹதீஸ்களை நடைமுறைப்படுத்துவதில் அவர்களுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுவதையும் நாம் அறிவோம். இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பானது அத்தகைய ழயீஃப் என்ற தரத்தையும் தாண்டி நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கிறது. யூதர்களின் கோர செயலாகத்தான் இதுவும் இருக்கும் என பலமாக சந்தேகிக்கத் தோன்றுகிறது.

நபி (ஸல்) அவர்கள் மீது மிகுந்த முஹப்பத் வைத்துள்ளதாக பிரசாரம் செய்யும் மேற்படி சுன்னத் ஜமாஅத்தின் ஆலிம்கள், அவ்வாறு நபி (ஸல்) அவர்கள் மீது உண்மையிலேயே முஹப்பத் வைத்திருந்தால் பிறை விஷயத்தில் நாம் இதுவரை கூறியுள்ள உண்மைகளை விருப்பு வெறுப்பின்றி ஆய்ந்து படித்து தங்களது கொள்கைவாதிகளுக்கு சத்தியத்தைச் உடைத்துச் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள். தாங்கள் காலம் காலமாக நம்பியிருந்த இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பை தூக்கி நிறுத்திட வேண்டுமென்றோ, தற்போதுதான் இவ்வறிவிப்பு இட்டுக்கட்டப்படது என்பது உங்களுக்குத் தெரியவந்ததா? என்ற கோணத்திலோ சிந்திக்கும் பட்சத்தில் அத்தகையவர்களுக்கு இப்புத்தகம் எத்தகைய பயனையும் அளிக்காது என்பதே உண்மையாகும்.

தவ்ஹீது ஜமாஅத்தினர் எனப்படுவோர் திருக்குர்ஆன், ஸஹீஹான சுன்னா, ஆகிய இவ்விரண்டு மட்டும்தான் மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் என்றும், இந்த இரண்டில் எதையும் கூட்டவோ குறைக்கவோ கூடாது என்றும் ஏற்று பின்பற்றுகின்றனர். நபி (ஸல்) அவர்களின் போதனைகளில் ஸஹீஹானதை மட்டும்தான் ஏற்று நடப்போம் என்று பிரசாரம் செய்யும் தவ்ஹீது ஜமாஅத்தின் ஆலிம்கள், நாம் இதுவரை கூறியுள்ள உண்மைகளை விருப்பு வெறுப்பின்றி ஆய்ந்து படித்து தங்களது கொள்கைவாதிகளுக்கு சத்தியத்தைச் சொல்லிட கடமைப்பட்டுள்ளார்கள். தாங்களின் பிறை நிலைபாடுகளுக்கு இந்த அறிவிப்பை பலமானதாக ஆதாரமாக நம்பி பிரச்சாரமும் செய்துவிட்டதால், தற்போது எப்படி பலஹீனம் என்று மக்களிடம் கொண்டு செல்வது என்று தயக்கம் காட்டுவார்களேயானால் அத்தகைய தவ்ஹீதுவாதிகளுக்கு இப்புத்தகம் எத்தகைய பயனையும் அளிக்காது என்பதை சொல்லிக் கொள்கிறோம்.

மேலும் தப்லீக் ஜமாஅத்தினர் எனப்படுவோர் சுன்னத் ஜமாஅத்தினர்களின் மார்க்க ஆதாரங்களைப் போலவே அவர்களும் ஏற்றிருந்தாலும் தப்லீக் தஃலிம் தொகுப்புகள் போன்ற பெரியவர்களின் போதனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். முஸ்லிம்களின் கடமைகளுள் ஒன்றான தொழுகையை இந்த முஸ்லிம் சமூகத்தில் நிலை நிறுத்தி அதை சரிசெய்துவிட்டால் ஒரு முஸ்லிமின் பெரும்பாலான விஷயங்கள் சரியாகிவிடும் என்ற நல்ல நோக்கத்தில் தொழுகை விஷயத்தை மட்டுமே ஏவுவோம் என்ற நிலைபாட்டை கெட்டியாகப் பற்றிப்பிடித்து பிரச்சாரமும் செய்து வருகின்றனர். தொழுகை விஷயம் என்பது மார்க்கத்தின் மிக முக்கிய அடிப்படைதான். அடிப்படையான விஷயங்களிலும் மிகமிக அடிப்படையான ஒரு விஷயமே தொழுகை என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்துமில்லை.

ஒரு மாணவன் துவக்கப் பாடசாலையில்தான் முதலாவதாக தன் கல்வியைத் துவங்குவான், பின்னர் நடுநிலைப்பள்ளிக்கு செல்லவேண்டும், பிறகு அவன் உயர்நிலைக் கல்வியை கற்கவேண்டும். அதன் பின்னர் கல்லூரி வாழ்கை, அதற்கு அடுத்தபடியாக பல்கலைக்கழகங்களில் துறைசார்ந்த ஆய்வு என்று கல்விக்கு பல படித்தரங்கள் உள்ளன. தொழுகையை சரிசெய்து கொள்ளவேண்டும் என்ற தப்லீக் ஜமாஅத்தினரின் நிலைபாடு ஒரு மனிதனின் துவக்கப்பாடசாலை என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம். ஒரு மாணவன் துவக்க பாடசாலையிலேயே இறுதிவரை இருக்க வேண்டும் என்பது அறிவார்ந்த வாதமாக இருக்க வாய்ப்பில்லை. தொழுகை என்ற கடமையோடு நோன்பு, ஜகாத், ஹஜ், இஸ்லாத்தை பிறருக்கு எத்தி வைப்பது போன்ற பல்வேறு கடமைகள் நமக்கு இருக்கின்றன என்பதையும் கண்ணிமிக்க தப்லீக் ஜமாஅத்தினர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும.

தப்லீக் ஜமாஅத்தினர்கள் வானத்திற்கு மேலேயும் பூமிக்குக் கீழேயும் உள்ள விஷயங்களை மட்டுமே கருத்தில் கொள்வார்கள் என்ற மலிவான குற்றச்சாட்டை பொய்யாக்கிட இனியேனும் அவர்கள் முயலவேண்டும். தங்களின் அழைப்புப் பணிகளுக்கு மத்தியில் மனிதர்களுக்கு காலம்காட்டியாகவும், ஹஜ்ஜை அறிவிப்பதாகவும் அல்லாஹ் கூறுகின்ற இந்த பிறை விஷயத்தை அக்கரையோடு கவனம் எடுக்க வழியுறுத்துகிறோம். ஒரே மறை ஒரே பிறை என்று இந்த முஸ்லிம் உம்மத்தை ஒரு குடையின் கீழ் ஒன்றபடுத்திட இருக்கும் ஒரே வாய்ப்பான இந்திய ஹிஜ்ரி கமிட்டியின் பிறை தீர்வுகளை கருத்தில் கொள்ள வேண்டும். மாறாக இப்பிறை பிரச்சனையை ஒரு பொருட்டாகவே கருதாத பட்சத்தில் அத்தகைய தப்லீக் ஜமாஅத்தினருக்கும் இப்புத்தகத்தின் கருத்துக்கள் எத்தகைய பிரதிபலனையும் அளிக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்னும் ஸஹாபாக்களின் ஏகோபித்த கருத்தையும் பின்பற்றவேண்டும், நம்காலத்திற்கு முன்னர் வாழ்ந்து மறைந்த நல்ல ஸலஃபு ஸாலிஹீன்களின் கருத்துக்களையும் ஏற்க வேண்டும் என்ற நிலைபாட்டில் உள்ளவர்களே ஸலஃபிகள் என்று அழைக்கப்படுகின்றனர். ஸலஃபிகள் எனப்படுவோரில் அறிஞர் அல்பானி (ரஹ்) அவர்களை மையமாகக் கொண்ட ஸலஃபி அல்பானிய்யா பிரிவினர்கள், அரபு உலகின் சமகாலத்தில் வாழ்ந்து மறைந்த அறிஞரான பெரியவர் இப்னல்பாஸ் என்ற பின்பாஸ் அவர்களின் சிந்தனைகளை மையப்படுத்தி பின்பற்றும் ஸலஃபிகள் பின்பாஸிய்யா அணியினர், அதுபோல மறைந்த மற்றொரு அறிஞர் சேக் ஸாலிஹ் அல் உதைமீன் அவர்களின் கருத்தக்களுக்கு முக்கியத்தும் கொடுப்போர் என்று பல பிரிவுகளாக இருப்பதை நாமும் அறிவோம்.

இந்நிலையில் ஸலஃபிக் கொள்கையுடையோர் அனைவரும் சிறந்த ஸலஃபுகளாக ஏற்றுக்கொண்டுள்ள நபித்தோழர்களான ஸஹாபாக்களில் எவரும் அறிவிக்காத மேற்படி விந்தையான வாகனக்கூட்டம் செய்தியை, அவர்களுக்கு அடுத்த நல்ல ஸலஃபுகளான இமாம்களில் பலர், இத்தகைய முர்ஸலான செய்திகளை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தெளிவாகவே விளக்கம் அளித்துள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

குறிப்பாக ஒட்டுமொத்த அனைத்து ஸலஃபுகளையும் தாண்டிய கண்ணியத்தையும், சிறப்பையும், அந்தஸ்தையும் பெற்றுள்ள அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள், நோன்பு நோற்க ஹராமான தினத்தில் அவர்கள் நோன்பை நோற்றிருந்தார்கள் என இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பானது இட்டுக்கட்டி அவர்களின் கண்ணியத்திற்கு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாகனக்கூட்டம் அறிவிப்பின் இத்தகைய மோசமான நிலையை ஸலஃபிகள் நிச்சயமாக மக்களுக்கு எடுத்துச் சொல்லிடக் கடமைப்பட்டுள்ளார்கள். இதை விடுத்து இனம் தெரியாத அபூ உமைருக்காக ஸஹாபாக்கள், ஹதீஸ்கலை இமாம்கள் என்று பல ஸலஃபுகளில் கண்ணியத்தை கருத்தில் கொள்ளாமல் இந்த அறிவிப்பை ஸஹிஹானது ஏற்றுக் கொள்வார்களேயானால் அத்தகைய பரிதாப நிலையுள்ள ஸலஃபிகளுக்கும் இந்த புத்தகத்தின் கருத்துக்கள் எந்தப் பயனையும் அளிக்காது என்று நிதர்சனமாகக் கூறிக்கொள்கிறோம்.


 

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்....
 நன்றி : இந்திய ஹிஜ்ரி கமிட்டி

Website : www.mooncalendar.in

[பதிவேற்றிய நாள் : 27-04-2013]
 

 


 

 

Hit Counter

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved