முதல் பக்கம்

வீடியோ

ஆய்வுகள்

கட்டுரைகள்

வரலாறு

இஸ்லாம்

தமிழ் குர்ஆன்

   

 

Go to Index                   


 

கிப்லாவை மாற்றியது யார்?


ததஜ பிறைவாசிகள் கிப்லா திசையைப் பற்றி ரெம்பவும்தான் அலட்டிக் கொள்வதை பார்க்கிறோம்.

இன்றுவரை தமிழகத்தில் நாம் பின்பற்றி வரும் கிப்லா நிர்ணயிக்கும்முறை துல்லியமற்றதாகும். காந்தமானியை (காம்பஸ்) பயன்படுத்தும் முறை துல்லியமற்றது என்பதை இஸ்லாமிய உலகம் நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டு பிடித்து விட்டது. ஆனால் அது இன்றழவும் தமிழ் கூறும் உலகத்தை வந்தடையவில்லை என்பது வருத்தத்திற்குரியது என்று இவர்கள் மிகவும் கவலைப்பட்டு எழுதியுள்ளதை அப்படியே தந்துள்ளோம். இவர்கள் என்னதான் சொல்ல வருகிறார்கள்?

தமிழகத்தில் இதுவரை கட்டப்பட்டுள்ள பள்ளிவாயில் அனைத்தும் தவறுதலாக கட்டப்பட்டு விட்டன. அனைத்தையும் இடித்து கிப்லாவை சரியாக முன்னோக்கும்படி மாற்ற வேண்டும் என்கிறார்களா? தங்கள் கருத்தில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் முதலில் தமிழகத்திலுள்ள ததஜவினரின் பள்ளிவாயில்கள் அனைத்தையும் இடித்து சரி செய்யட்டுமே, செய்வார்களா?.

மேலும், சூரியன் கஃபாவுக்கு நேராக எப்போது வரும்?. கிப்லாவுடைய திசையை கண்டுபிடிப்பது எப்படி?. தொழுகை நேரங்களில் சூத்திரங்கள் என்ன? என்பன போன்ற கருத்துக்களை, இணையதளங்களின் ஆங்கில கட்டுரைகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து ததஜவினரை தினறடித்து வருகின்றன. அவற்றை படிக்கும் ததஜவினரும் உண்மை விபரம் புரியாமல் ரசித்து, லயித்து போவதும் வாடிக்கையாகி விட்டது. இன்னும் ஹிஜ்ரி கமிட்டியை இவ்விஷயத்திலும் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து அவதூறுகளை சுமத்துகின்றனர். கிப்லா பற்றிய விளக்கம் என்று ததஜவினர் கூறி வருவதே, அவர்களின் தமிழகப்பிறை நிலைப்பாட்டில் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்வதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே.

கிப்லா சம்பந்தமாக ததஜ பிறைவாசிகளின் கூறிவரும் கருத்துக்களை கீழே படியுங்கள்.

1. தொழுகையின் வரிசைகள் கஃபாவை சுற்றி வட்டமாக அமைத்தால், அந்த வரிசை பூமிப்பந்தில் கஃபாவின் நேர் எதிர் பக்கம் (Antipode) வட்டமாக அமையும். ஆனால் ஹிஜ்ரி கமிட்டியினர் திசையை நோக்கி நேர்கோட்டில் நிற்கச்சொல்கிறார்கள்.

2. சர்வதேசத்தேதிக்கோட்டுப் பகுதியில் கிழக்கு மேற்காக பிரிந்துள்ள இடங்களில் ஹிஜ்ரி கமிட்டியினர் சொல்வதைப் போன்று கிப்லா திசை அமையவில்லை.

3. முஸ்லிம்களை லண்டன் கிரீன்விச் நகரத்தை முன்னோக்கி தொழச் சொல்கிறார்கள்.

4. ஹிஜ்ரி கமிpட்டியினர் கிப்லாவை மாற்றிவிட்டார்கள்.


இப்படி பல்வேறு அவதூறுகளையும் அள்ளிவீசி இணையதளங்களில் பரப்பியுள்ளனர். இப்படி அடுக்கடுக்கான அவதூறுகளை பல கட்டுரைகளாக எழுதி விட்டால்,

தமிழகம் என்ற எல்லைக்குள்ளேதான் பிறை பார்க்க வேண்டும் என்ற ததஜவின் பிறை நிலைப்பாடு சரியானதாக ஆகிவிடுமா?

29-பின்னேரம் 30-வது இரவு மேற்கில் பிறை பார்த்த பின்னரே மாதத்தைத் தொடங்க வேண்டும் என்ற அவர்களின் நிலைபாடும் உண்மையாகி விடுமா என்ன?


இவர்களின் அபாண்ட குற்றச்சாட்டுகளுக்கான விளக்கங்களுக்கு பார்ப்பதற்கு முன், கிப்லா குறித்த அடிப்படையான சில விஷயங்களையும் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

ஹிஜ்ரி கமிட்டி என்பது இஸ்லாமிய சந்திர நாட்காட்டி சம்பந்தமாக பிரச்சாரம் செய்யும் ஒரு ஆய்வு குழு. பிறைகள் குறித்து குர்ஆன் சுன்னாவின் சத்தியமான கருத்துக்களைதான் மக்களிடையே போதித்து வருகிறது. கிப்லா திசையை முன்னோக்குவது பற்றிய விரிவான ஆய்வறிக்கைகளை ஹிஜ்ரிகமிட்டி இன்னும் வெளியிடவில்லை. அதற்கு அவசியமும் ஏற்படவில்லை. காரணம் மக்காவிலுள்ள கஃபாதான் நமக்கு கிப்லா என்பதில் முஸ்லிம் உம்மத்தில் எவ்வித மாற்றுக் கருத்துகளும் இல்லை.

வட ஐரோப்பா, வடதென் அமெரிக்கா பகுதியிலுள்ள முஸ்லிம்களில் விரல்விட்டு என்னும் அளவுக்குள்ள சிறு குழுக்களிடையேதான் கிப்லாவின் திசையை முன்னோக்குவது பற்றிய கருத்து வேறுபாடுகள் உள்ளது. அக்குழுவினரில் சிலர், பெரிய வட்டக் கோட்பாட்டை (Great Circle on Azimuthal projection of earth) முன்னிருத்தி வடஅமெரிக்காவின் பள்ளிவாயில்கள் சிலவற்றை மாற்றி அமைக்க வேண்டும் என்கின்றனர். இருப்பினும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் கிப்லாவை முன்னோக்கும் விஷயத்தில் கருத்து வேறுபாடின்றி ஒன்றுபட்டே உள்ளனர். இவ்விஷயத்தில் குர்ஆன் சுன்னாவின் வழிகாட்டல்கள் மிகத்தெளிவாகவும், புரிவதற்கு லேசகவுமே உள்ளன – அல்ஹம்துலில்லாஹ்.

சுருக்கமாக சொல்வதென்றால், நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னர், இஸ்லாத்தை எட்டுத்திக்கும் எடுத்துச் சென்ற நபித்தோழர்களான ஸஹாபாக்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவிச் சென்றனர். அவர்கள் சென்றடைந்த பகுதிகள் அனைத்திலும் தொழுகைக்காக பள்ளிவாயில்களை அமைத்தனர். அவர்களில் யாரும் பூமியை அஸிமத்தல் வடிவில் (Azimuthal Projection) பார்த்து, பெரிய வட்டக் கோட்பாட்டின் (Great Circle Concept) படி பூமிப்பந்தில் நூல் பிடித்து கிப்லாவின் திசையை நிர்ணயம் செய்யவில்லை. ஆனால் ததஜ பிறைவாசிகள் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக பிரச்சாரம் செய்கின்றனர்.

மேலும் நபித்தோழர்களுக்குப் பிறகு அவர்கள் வழி தொடர்ந்த தாபியிஈன்களும், தபஅ தாபியிஈன்களும் இஸ்லாத்தை எடுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றனர். தொழுகைக்காக பூமியெங்கும் பள்ளிவாயில்களை கட்டி எழுப்பினர். அவர்களும் அஸிமத்தல் வடிவம், பெரிய வட்டக் கோட்பாடு என்றெல்லாம் ததஜ பிறைவாசிகளைப் போல அலட்டிக் கொள்ளவில்லை.

அவ்வளவு ஏன்? நாம் வாழுகின்ற இக்காலத்தில்கூட நாம் கட்டும் பள்ளிவாயில்களை யாரும் கமால்அப்தலி என்பவரின் கூற்றுப்படி (Great Circle on Azimuthal projection of earth) கிப்லாவின் திசையை அமைப்பதில்லை. காரணம் கிப்லா விஷயத்தில் இந்த அளவுக்கு கஷ்டப்பட வேண்டும் என்று மார்க்கம் நமக்கு வலியுறுத்தவில்லை. மார்க்கம் மிக இலேசானது.

புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை (அல்குர்ஆன் 2:177).

கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம். நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது (அல்குர்ஆன் 2:115) என்பதை அனைவரும் அறிந்தே வைத்துள்ளோம்.

கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே உள்ளது கிப்லாவாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவித்தவர் : அபூஹூரைரா (ரழி), நூற்கள் : திர்மிதி, இப்னுமாஜா.

மக்கா, மதீனா ஆகிய இரு நகரங்கள் எந்தெந்த திசையில்? எப்படி அமைந்துள்ளன? என்பதை நபித்தோழர்கள் நன்கே அறிவர். தாங்கள் பிறந்து வளர்ந்து, அடிக்கடி பிரயாணங்கள் செய்த இடங்கள் என்ற அடிப்படையில் நபித்தோழர்களுக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. மக்கா நகருக்கு வடக்கு பக்கமாக மதீனா நகர் அமைந்துள்ளது. எனவே மதீனத்து முஸ்லிம்கள் கஃபாவை முன்னோக்கி தெற்கு திசை நோக்கி தொழ வேண்டும்.

இருப்பினும் நபி (ஸல்) அவர்களிடம் மதீனாவில் வைத்து கிப்லாவின் திசை பற்றி நபித்தோழர்கள் வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அஜிமத்தல் வடிவம், பெரிய வட்டக் கோட்பாடு என்றெல்லாம் முன்அறிவிப்பு செய்யவில்லை. குறைந்த பட்சம் தெற்கு பகுதியை நோக்கி தொழுங்கள் என்றுகூட மதீனாவாசிகளுக்குக் கட்டளையிடவில்லை. ஆனால் 'கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே உள்ளது கிப்லாவாகும்' என்று ரத்தினச் சுறுக்கமாக சொல்லி விட்டார்கள். நபித்தோழர்களின் கேள்வியும், நபி (ஸல்) அவர்களின் பதிலும் இன்று பிறைவாசிகள் எழுப்பும் கிப்லா பிரச்சனைக்கு தீர்வைச் சொல்வது போல அமைந்துள்ளதை காண்கிறோம் - ஸூப்ஹானல்லாஹ்.

இனி ததஜ பிறைவாசிகளின் விமர்சனங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1.தொழுகையின் வரிசைகள் கஃபாவை சுற்றி வட்டமாக அமைத்தால், அந்த வரிசை பூமிப்பந்தில் கஃபாவின் நேர் எதிர் பக்கம் (Antipode) வட்டமாக அமையும். ஆனால் ஹிஜ்ரி கமிட்டியினர் திசையை நோக்கி நேர்கோட்டில் நிற்கச்சொல்கிறார்கள் என்பது இவர்களின் முதலாவது குற்றச்சாட்டு. இதை விளக்கி அவர்கள் வெளியிட்ட படத்தை இதன் கீழே அப்படியே தருகிறோம்.


மேலே உள்ள படம் மக்காவிலுள்ள கஃபாவை சுற்றி வட்ட வடிவில் தொழுகை வரிசை அமைந்திருப்பதை விளக்குவது ஆகும். இந்த வரிசையை அப்படியே நீட்டிக்கொண்டே சென்றால் பூமிப்பந்தில் கஃபாவின் நேர் எதிர்முனை (Antipode) கீழ்க்கண்டவாறு அமையும் என்கின்றனர். எனவேதான் அந்த பகுதியை புதிய தேதிக்கோடாக அமைக்க வேண்டும் என்றும் ததஜவினர் கூறி வருகின்றனர்.

இதில் நாம் என்ன கேட்கிறோம் என்றால்,

1. மேலே உள்ள படங்களை அடிப்படையாக வைத்துதான் கிப்லா நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதற்கு குர்ஆன், சுன்னாவிலிருந்து ஒரு ஆதாரத்தையாவது தாருங்கள் என்கிறோம்.

2. பெரிய வட்டக் கோட்பாடு என்ற இந்த சூத்திரத்தின் அடிப்படையில்தான் ஒவ்வொரு பள்ளிவாயிலும் நிறுவப்பட வேண்டும். அதுவல்லாமல் அமைக்கப்பட்ட பள்ளிவாயில்கள் அனைத்தும் கஃபாவை சரியாக முன்னோக்கிட வில்லை என்பதால் அதில் தொழக்கூடாது என்பதுதான் இவர்களின் வாதமா? அப்படியானால் அதற்கும் குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரங்களை தாருங்கள் என்று கேட்கிறோம்.

3. மேலும் மேற்படி பெரிய வட்டக் கோட்பாட்டின் படி அமையாத பள்ளிவாசல்களை என்ன செய்வது? அதில் தொழுது வரும் முஸ்லிம்களின் தொழுகையின் நிலை என்ன? என்பதையும் இவர்கள் தெளிவுபடுத்திட வேண்டும்.

இவர்கள் மேலே தந்திருக்கும் படங்களிலிருந்து பல கேள்விகள் நமக்கு எழுகின்றன. அதில் ஒன்றை மட்டும் இக்கட்டுரையில் குறிப்பிடுகிறோம்.

அதாவது ததஜவினர் கூறும் பெரிய வட்டக் கோட்பாட்டின் அடிப்படையில் கஃபாவை முன்னோக்கி அமைந்துள்ள நாடுகளில் வட்டமாக தொழுகை வரிசையை ஓரளவுக்கு அமைத்து விடலாம். அதே நேரத்தில், பூமிப்பந்தில் கஃபாவின் நேர் எதிர்முனை (Antipode) பகுதியில் ஒரு பள்ளிவாயில் கட்டப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். இவர்கள் கூறுவதைப் போல வட்டமான இந்த தொழுகை வரிசையை அப்படியே நீட்டிக்கொண்டே சென்றால், கஃபாவின் நேர் எதிர்முனையிலுள்ள அந்த பள்ளிவாசலில் தொழுகைக்கான வரிசையை எவ்வாறு நாம் அமைக்க முடியும்? நமது இக்கேள்வியை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள இதன்கீழ் படங்களின் மூலம் விளக்குகிறோம்.

மேலே உள்ள படம் கஃபாவை சுற்றி வட்டமாக அமையும் தொழுகை வரிசையை விளக்குகிறது. கீழுள்ள படம் கஃபாவுக்கு எதிர்பக்கமுள்ள ஒரு மஸ்ஜிதின் தொழுகை வரிசையானது, நேர்கோட்டில் இல்லாமல் 360 டிகிரி வட்டமாக ஒவ்வொருவரும் தத்தமது முதுகை காட்டிக் கொண்டு நிற்பதுபோல அமையும். ததஜ பிறைவாசிகளின் கருத்தை பின்பற்றினால் அங்குள்ள பள்ளிகளில் இப்படி நின்றுதான் தொழ முடியும்.

முஸ்லிம்களை முதுகைக் காட்டிக் கொண்டு தொழுவதற்குதான் கட்டுரைக்கு மேல் கட்டுரையாக வரைந்து தள்ளினார்கள் போலும். கிப்லா விஷயத்தை அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் மிக இலகுவாக ஆக்கித் தந்துள்ள நிலையில், அதை ஏன் சிரமமாக்க வேண்டும்? இப்படி யாரும் கேள்விகளை கேட்டுவிடக்கூடாது என்பதற்காக கிப்லா ஆய்வு என்ற பெயரில் பல முரண்பட்ட கருத்துக்களையும் தங்கள் இணையதளத்தில் பதிந்துள்ளனர். அவற்றையும் அப்படியே தருகிறோம்.

'ஹரமில் தொழுபவர்கள் காஅபாவை சுற்றி நின்று தொழுவது போன்று கஅபா எதிர் முனையில் உள்ளவர் எந்த திசையை நோக்கி தொழுதாலும் அது கஅபா திசையே. அதனை சுற்றிலும் 1000 கிலோமீட்டர் அளவிற்கு அந்த இடத்தை கடலாக்கி விட்டான். அப்படியே வீம்புக்கு அந்த இடத்தில் செயற்கையாக ஒரு தீவை உருவாகினாலோ, கப்பலை நிறுத்தினாலோ கூட இஸ்லாம் அதற்கு தீர்வு வழங்காமல் இல்லை. ரசூலல்லாஹ் கஅபாவிற்கு உள்ளே நின்று தொழும்போது கஅபாவின் வாசலின் எதிரில் உள்ள சுவற்றை நோக்கி தொழுதார்கள் என்று ஹதீஸில் தெளிவாக உள்ளது. அதே போல் மிகச்சரியாக கஅபாவின் எதிர்முனையில் நின்று தொழுபவர்கள் ரசூலுல்லாஹ் கஅபாவிற்குள் நோக்கிய அந்த சுவற்றை நோக்கி தொழுதால் போதுமானது.'

ததஜ பிறைவாசிகள் மேற்கண்டவாறு எழுதியுள்ளதில் நாம் சொல்ல வருவது என்னவெனில்,

முதலாவதாக, கஃபாவுக்கு எதிர்முனையில் 1000 கிகோமீட்டர் அளவுக்கு கடல் மட்டும்தான் இருக்கிறது என்று இவர்கள் எழுதியுள்ளது உண்மைக்கு புறம்பான தகவல் ஆகும். அப்பகுதிக்கு மிக அருகில் பல்வேறு தீவுக்கூட்டங்கள் உள்ளன.

மக்காவை பூமியின் மத்தியப் பகுதியாக்குவோம் என்று இவர்கள் முன்பு வாதித்தனர். சுமார் 1200 சதுர கீலோ மீட்டர்கள் கொண்ட ஒட்டுமொத்த மக்கா நகரையே ஒரு மையப்புள்ளி என்று வைத்து அதற்கு எதிர்பகுதியில் சுமார் 1200 சதுர கீலோ மீட்டர்கள் அளவுக்கு தேதிக்கோட்டை அமைக்க வேண்டுமா? என்று நாம் கேள்வி எழுப்பினோம் (பார்க்க). நிலைமையை புரிந்து கொண்டு 'கஃபா', 'கஃபாவின் எதிர்முனை' என்று எல்கையை சுருக்கி தங்கள் வாதத்தை மாற்றி விட்டனர். காரணம் புனித கஅபா என்பது பரப்பளவில் சுமார் 13 மீட்டர் நீளமும், 11 மீட்டர் அகலமும் கொண்டது என்பதால்.

இரண்டாவதாக, இவர்கள் குறிப்பிட்டுள்ளபடி அப்பகுதியில் கடல் மட்டுமே இருக்கிறது என்று அவ்விடத்தை தட்டிக் கழிக்க இயலாது. பூமியின் நிலப்பரப்பு என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுதல்களுக்கு உள்ளாகியே வந்துள்ளது. தற்போது அவ்விடத்தில் கடல் மட்டும்தான் உள்ளது என்று வைத்துக் கொண்டாலும், நாளை தீவுக்கூட்டங்கள் அங்கு உருவாகலாம். எனவே ஒரு விஷயத்திற்கு இஸ்லாமிய அடிப்படையில் தீர்வைச் சொல்லும்போது இவை அனைத்தையும் சிந்திக்க வேண்டும்.

மூன்றாவது, அவ்விடத்தில் செயற்கை தீவுகளை ஏற்படுத்துவதும், கப்பலில் பயணிப்பதையும் வீம்புக்காக என்று ததஜ பிறைவாசிகள் எழுதியுள்ளனர். பிரஞ்சு பாலினேசியா தீவுகள், டெமடங்கி மற்றும் காம்பியர் தீவுகள் என்று அழைக்கப்படும் பல்வேறு தீவுக்கூட்டங்கள் அவ்விடத்திற்கு மிக அருகில்தான் அமைந்துள்ளன. ஒவ்வொரு தீவுகளுக்குமிடையில் கடல் வழியான போக்குவரத்துதான் அங்கு உள்ளது. சிறிய கப்பல்கள் மற்றும் படகுகள் எந்நேரமும் சென்று கொண்டிருக்கக்கூடிய கடல்பகுதி அது. எனவே அவ்விடத்தில் முஸ்லிம்கள் கப்பலில் பயணிப்பதை வீம்புக்காக என்று தட்டிக் கழிக்க முடியாது.

நான்காவது விஷயம், கஅபாவின் எதிர் முனையில் உள்ளவர் எந்த திசையை நோக்கி தொழுதாலும் அது கஅபாவின் திசையே என்று ததஜ பிறைவாசிகள் கூறுகின்றனர். இவ்வாறு கூறுவதால் அவ்விடத்தில் சுமார் ஒரு கிலோமீட்;டர் வட்ட சுற்றளவில் அமையும் பள்ளிவாயில்களின் கிப்லா திசைகள் எதிர்எதிர் திசைகளை நோக்கும்படி அமையும். கீழுள்ள படத்தை பாருங்கள்.


அதாவது கஅபாவின் எதிர் முனையில் உள்ள அந்த இடத்தில், ஒரு கிலோமீட்;டர் சுற்றளவுள்ள ஒரு தீவுக்குள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நான்கு பகுதியிலும் ஒவ்வொரு பள்ளிவாயில்களை நாம் கட்டுவதாக கொள்வோம். அப்படி கட்டினால், ஒவ்வொரு பள்ளிவாயில்களிலும் உள்ள கிப்லா திசை வேறுபட்டிருக்கும். கிழக்கு பகுதியில் கட்டப்பட்ட பள்ளிவாயிலுக்கு கிப்லா கிழக்காவும், மேற்கு பகுதியில் கட்டப்பட்ட பள்ளி வாயிலுக்கு கிப்லா மேற்காகவும், வடக்கு பகுதியில் கட்டப்பட்ட பள்ளிவாயிலுக்கு வடக்கு திசையாகவும், தெற்குப் பகுதியில் கட்டப்பட்ட பள்ளி வாயிலுக்கு கிப்லாதிசை தெற்காகவும் அமையும்.

இறுதியாக, கஅபாவின் எதிர்முனையில் நின்று தொழுபவர்கள் ரசூலுல்லாஹ் கஅபாவிற்குள் நோக்கிய அந்த சுவற்றை நோக்கி தொழுதால் போதுமானது என்றும் இவர்கள் எழுதியுள்ளனர். இப்படி எழுதிவிட்டபடியால், மஸ்ஜிதுகளின் கிப்லா திசை பெரிய வட்டக் கோட்பாட்டின்படிதான் அமைக்கப்பட வேண்டும் என்று இதுவரை வாதித்த இவர்களின் கருத்து தோல்வி கண்டு தவிடு பொடியாகி விட்டது. காரணம் ஒரு சுவற்றை நோக்கி வட்டவடிவில் நின்று தொழ முடியாது, நேர்கோட்டு வரிசையில் நின்றுதான் தொழ முடியும். எனவே கஅபாவின் எதிர்முனையில் கிப்லாவின் திசை ஒன்றுதான், பல திசைகள் அல்ல என்பதை இவர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள். இவர்கள் வாதம் தவறானது என்பதும் தெளிவாக நிரூபனமாகி விட்டது.

மேலும் ததஜ பிறைவாசிகள் இந்த கிப்லா விஷயத்தை ஆய்வு செய்கிறேன் பேர்வழி என்று எந்த அளவுக்கு குழம்பியுள்ளார்கள் என்பதையும் பாருங்கள்.

கிப்லாவை நோக்கி தொழுவதன் முக்கியத்துவத்தை நாம் அறிவோம். அந்த கிப்லா மிகத்துல்லியமாக இருக்க வேண்டியதில்லை. நம் சக்திக்கு உட்பட்டு கிப்லாவை நோக்கினால் போதுமானது. கிப்லாவை மிக துல்லியமாக அமைத்துகொள்ள வேண்டும் என மார்க்கம் கூறவில்லை என்றும் எழுதி ததஜ பிறைவாசிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். இவ்வாறு ஒப்புக் கொண்டு விட்டு, கிப்லாவை மாற்றி விட்டார்கள் என்று சம்பந்தமின்றி ஹிஜ்ரி கமிட்டி மீது இவ்வளவு வசைமொழிகளை பரப்பி வருவது ஏன்? என்று கேட்கிறோம். சரி ஒரு வாதத்திற்காக ததஜவினர் சொல்லும் கிப்லா கோட்பாடையே நாமும் பின்பற்றுவதாக வைத்துக் கொள்வோம். அதனால் இவர்கள் கூறிவரும்,

தமிழகம் என்ற மாநில அளவு எல்லைக்குள்தான் பிறை பார்க்க வேண்டும் என்பது சரியாகிவிடுமா?

மாதத்தின் 29 நாள் பின்னேரம், மஃரிபு நேரத்தில் மேற்குத் திசையில் பிறையை பார்ப்பதுதான் மார்க்கம் என்று நிரூபிக்க முடியுமா?

பிறையான மேற்குத் திசையில் உதித்து கிழக்குத் திசையில் மறைவதாக பீஜே சொன்னது சரியானதுதான் என்று நிரூபனம் ஆகிவிடுமா?
ததஜவினர் பதில் சொல்லட்டும்.

இவர்களின் அடுத்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் படியுங்கள். அதாவது சர்வதேசத்தேதிக்கோட்டுப் பகுதியில் கிழக்கு மேற்காக பிரிந்துள்ள இடங்களில் ஹிஜ்ரி கமிட்டியினர் சொல்வதைப் போன்று கிப்லாதிசை அமையவில்லையாம். முஸ்லிம்களை லண்டனிலுள்ள கிரீன்விச் நகரத்தை முன்னோக்கி தொழச் சொல்கிறோமாம்.

வல்ல அல்லாஹ்வின் கட்டளைபடி கஃபாவை கிப்லாவாக முன்னோக்கி தொழுது வரும் சக முஸ்லிம்களைப் பார்த்து இந்த ததஜ அறிவிலிகள் எந்த அளவுக்கு அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர் என்று பாருங்கள். இவர்களை அறிவிலிகள் என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது?. இவர்களின் மனதில் நம்மீது எந்த அளவுக்கு குரோதமும், விரோதமும் குடி கொண்டுள்ளது என்பதை இதுபோன்ற விமர்சனங்களின் மூலமே தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த நூற்றாண்டில் ஹிஜ்ரி கமிட்டியின் மீது சொல்லப்பட்ட உச்சகட்ட அவதூறுகளில் இதையும் வரிசைப்படுத்தலாம்.

மேற்படி குற்றச்சாட்டுக்கான விளக்கத்தை படங்களின் மூலம் விளக்கினால் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

மேலே உள்ள உலக வரைபடத்திலுள்ளபடி, மக்காவிலுள்ள கஃபாவுக்கு கிழக்கிலுள்ள நாடுகளான இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஃபிஜி போன்ற நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் தங்கள் தொழுகையின் போது தங்களுக்கு மேற்குத் திசையிலுள்ள கஃபாவை நோக்கி தொழுது வருகிறார்கள்.

மக்காவிலுள்ள கஃபாவுக்கு மேற்கில் அமைந்துள்ள நாடுகளான ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் தங்கள் தொழுகையின் போது தங்களுக்கு கிழக்குத் திசையிலுள்ள கஃபாவை நோக்கி தொழுது வருகிறார்கள். இதுபோன்ற கஃபாவுக்கு வடக்கு, மற்றும் தெற்காக அமைந்துள்ள பகுதிகளிலுள்ள முஸ்லிம்களும் முறையே தெற்கு மற்றும் வடக்காக கஃபாவை முன்னோக்கி தொழுது வருகிறார்கள்.

இந்நிலையில் முஸ்லிம்களை லண்டனிலுள்ள கிரீன்விச் நகரத்தை முன்னோக்கி தொழச் சொல்கிறார்கள் என்று பிறைவாசிகள் புளுகுவது நகைப்புக்குரியது. லண்டனுக்கும், மக்காவுக்கும் இடையே எகிப்து, லிபியா, சூடான் உட்பட பல ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அங்குள்ள முஸ்லிம்கள் கஃபாவை முன்னோக்கும் போது, லண்டன் கிரீன்விச் நகரம் அவர்களின் முதுகுக்குப் பின்னால் அமையும். அந்நாட்டு முஸ்லிம்களை எல்லாம் அப்படியே பின்பக்கமாக திரும்பி (About Turn) தொழச் சொல்வதுபோல எழுதியிருப்பது இவர்களின் கற்பனைத் திறனை வெளிப்படுத்துகிறது. சர்வதேசத் தேதிக்கோட்டின் மீது இவர்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்புதான் இப்படி எழுத வைத்துள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை சற்று நிதானமாக பாருங்கள்.


கஃபாவுக்கு கிழக்கிலுள்ள நியூசிலாந்து, ஃபிஜி நாட்டைச் சார்ந்த முஸ்லிம்கள் தங்களுக்கு மேற்குத் திசையிலுள்ள கஃபாவை நோக்கி தொழுது வருகிறார்கள். அதே வேளையில் கஃபாவுக்கு மேற்கிலுள்ள அமெரிக்கா, கனடா பகுதியில் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் தங்களுக்கு கிழக்குத் திசையிலுள்ள கஃபாவை நோக்கி தொழுது வருகிறார்கள் என்பதை சற்று முன்னர் படித்தோம். கஃபாவுக்கு கிழக்கு திசையிலும், கஃபாவுக்கு மேற்குத் திசையிலும் உள்ள மக்களை பிரிக்கக்கூடிய பகுதியாக இந்த சர்வதேசத் தேதிக்கோடு யதார்த்தமாகவே அமைந்துள்ளது. இவர்களை அணியணியாக நிறுத்தினால் சர்வதேசத் தேதிக்கோட்டில் பிரிந்து இருவேறு திசைக்குரியவர்களாக அவர்கள் இருப்பர் என்று நாம் கூறுகிறோம்.

உடனே ததஜ பிறைவாசிகளுக்கு கோபம் வந்துவிட்டது. அலாஸ்கா மக்கள் கிழக்கு நோக்கியா தொழுகிறார்கள்? கிரீன்லேண்ட் முஸ்லிம்கள் கிழக்கு நோக்கியா தொழுகிறார்கள்? என்று வரிசையாக அடுக்கிக் கொண்டே போகின்றனர். பெரிய வட்டக் கோட்பாட்டின் படி அவர்கள் வடக்கு நோக்கி அல்லவா தொழுகிறார்கள்? என்றும் வாதம் வைத்தனர்.
நாம் சொல்லிய உதாரணம் யாரெல்லாம் கஃபாவுக்கு நேர்கோட்டில் வரிசையில் அணி அணியாக நிற்று தொழுகிறார்களோ அவர்கள் குறித்து சொன்ன உதாரணம் என்பதைக் கூட இவர்களால் விளங்க முடியவில்லை.

பிறர் எடுத்து வைக்கும் கருத்துக்கள் உவமானமாக சொல்லப்பட்டதா? உதாரணமாக சொல்லப்பட்டதா? அல்லது அதைத்தான் முக்கிய ஆதாரமாக தருகின்றனரா? என்பதைப் பற்றி எல்லாம் இவர்கள் சிந்திப்பதில்லை. போகிற போக்கில் ஹிஜ்ரி கமிட்டியை விமர்சனம் செய்து விட்டால் போதும் என்ற நிலையில் இவர்கள் உள்ளனர். தமிழகப்பிறை நிலைப்பாட்டில் எப்படியேனும் தொண்டர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தமும் இதிலிருந்து தெரிகிறது.

இத்தோடு விட்டார்களா? இல்லை. சர்வதேசத்தேதிக் கோட்டை மையப்படுத்தி, அதற்கு நேர் எதிராக அமையும் லன்டன் கீரீன்விச் தீர்க்கரேகையையும் குறிப்பிட்டு, அதை நோக்கிதான் ஹிஜ்ரி கமிட்டி தொழச் சொல்கிறது என்று வடிகட்டிய அவதூறையும் நம்மை நோக்கி அள்ளி வீசியுள்ளனர்.

இதற்குக் காரணம் ததஜவினர் கஃபாவை பூமியின் மையப்பகுதியாக வைத்து அதன் நேர்எதிர் பகுதியை தேதிக் கோடாக அமைக்க வேண்டும் என்று துடிப்பதை தவறான கருத்து என்று நாம் நிருவி விட்டதால் (பார்க்க) அதற்கு எதிராக சர்வதேசத்தேதிக் கோட்டையும் மையப்படுத்தி, அதற்கு நேர்எதிர் பகுதியாக அமையும் லன்டன் கீரீன்விச் தீர்க்கரேகையை முன்னோக்குவதாக கூறுகின்றனர். ஹிஜ்ரி கமிட்டியினரை பொருத்தவரை, நாங்கள் சர்வதேசத்தேதிக் கோட்டை பூமியின் மையப்பகுதி என்று நம்பவுமில்லை, லண்டன் கிரீன்விச் பகுதியை நாங்கள் தூக்கி பிடிக்கவுமில்லை.

மேலும் ஹிஜ்ரி கமிpட்டியினர் கிப்லாவை மாற்றிவிட்டார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டையும் இந்த ததஜ பிறைவாசிகள் முன்வைக்கிறார்கள்.

இதற்கு நமது சுருக்கமான விளக்கமாவது, பிறைவாசிகளின் தலைமைப் பீடமான ஜெரூசலத்திலுள்ள, பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை, இனி மக்காவிலுள்ள கஃபாவை நோக்கித்தான் தொழ வேண்டும் என்று கட்டளையிட்டு கிப்லாவை மாற்றி அமைத்தான் வல்ல அல்லாஹ். நபி (ஸல்) அவர்களின் விருப்பத்திற்கு இணங்க இச்சம்பவம் நடைபெற்றதை அல்குர்ஆனின் 2:142 முதல் 2:150 வரையுள்ள வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஆக கிப்லா மாற்றப்பட்டு சுமார் 1400 ஆண்டுகள் கடந்து விட்டன. இச்சம்பவம் நபி (ஸல்) அர்களின் ஹிஜ்ரத்துக்குப் பின்னர் நடந்ததால் இதுவும் ஹிஜ்ரி கமிட்டியினர் செய்த சதியாகத்தான் இருக்கும் என்ற ஆய்வு முடிவுக்கு ததஜ பிறைவாசிகள் வந்துவிட்டார்கள் போலும்.

கிப்லா குறித்து ததஜ பிறைவாசிகளுக்கு நாம் அளித்துள்ள பிற விளக்கங்களையும் அவசியம் பார்வையிடவும்.

தேதிக்கோட்டை மாற்றத் துடிக்கும் ததஜவின் கனவு நிறைவேறுமா?

கிப்லா சம்பந்தமான குர்ஆன் வசனங்கள் கூறுவது என்ன?

பூமியின் மேற்பரப்பில் மத்தியப் பகுதி என்று வரையறுக்க முடியுமா?

பூமியின் மையப்பகுதி மக்கா நகரமா? சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா?

 

 


 


 

 


 

Visit : www.mooncalendar.in

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved