முதல் பக்கம்

வீடியோ

ஆய்வுகள்

கட்டுரைகள்

வரலாறு

இஸ்லாம்

தமிழ் குர்ஆன்

   

 

Go to Index                   

உலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா?

கேள்வி : புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நடைபெறும் போது பூமியில் இரண்டுகிழமைகள் இருக்கும். அதனால் 24 மணிநேரங்கள் கொண்ட ஒருநாளுக்குள் நோன்பைத் துவங்கவோ, பெருநாளை கொண்டாடவோ முடியாது என்கிறார்களே இதன் விளக்கம் என்ன?

பதில் : ஒவ்வொரு சந்திர மாதத்தின் இறுதி நாளிலும் சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய முக்கோள்களும் ஒரு கோட்டில் தவறாமல் சங்கமிக்கும். அவ்வாறு சங்கமிக்கும் நிகழ்வைத்தான் புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) என்கிறோம். சங்கமம் என்ற இந்த நிகழ்வு பூமியின் ஒரேயொரு மையப்புள்ளியில் (One Geocentric Position) தான் நடைபெறும். ஒருமாதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மையப்புள்ளிகளில் சங்கமம் நடைபெறாது. சங்கமம் நடைபெறும் மையப்புள்ளியின் பகுதிக்கு ஒரேயொரு தேதியும், ஒரேயொரு கிழமையும்தான் (நாள்) இருக்கும். சங்கமம் நடைபெறும் அந்த சர்வதேச நாளைத்தான் புவிமைய சங்கம நாள் என்கிறோம். பூமியின் ஒரு மையப்புள்ளியில் நடைபெறும் நிகழ்வான இப்புவிமைய சங்கமம் என்ற அந்த சொல்லிலேயே இக்கேள்விக்குரிய விடை உள்ளது. சங்கமம் நடைபெறும் அந்த சர்வதேச நாளுக்கு, இரண்டு தேதிகள் கிடையாது என்பதை அறிந்து கொள்க.

இப்போது கேள்வியை மீண்டும் படியுங்கள். புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நடைபெறும் போது பூமியில் இரண்டு கிழமைகள் (நாட்;கள்) இருக்கும் என்பது வாதம். சங்கமம் நடைபெறாத மாதத்தின் மற்ற நாட்களிலும் பூமியில் இரண்டு கிழமைகள் இருக்கத்தான் செய்யும். எனவே ஒவ்வொரு தேதிக்கும் இரண்டிரண்டு கிழமைகள் கொடுக்கலாமா என்ன? ஒவ்வொரு நாளுக்கும் (கிழமைக்கும்) குறிப்பிட்ட ஒரு தேதி மட்டும்தான் உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.

உதாரணமாக ஒரு சந்திரமாதத்தின் 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பூமியின் ஒரு மையப்புள்ளியில் சங்கமம் நிகழ்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது வியாழக்கிழமையில் இருக்கும் நாடுகள் அனைத்திற்கும் 29-வது தேதியாகத்தான் இருக்கும். அன்றி அந்த வியாழக்கிழமைக்கு 30-வது தேதியோ, 28-வது தேதியோ இருக்காது. அதுபோல சங்கமம் நடைபெறும் வெள்ளிக் கிழமைக்கு 30-வது தேதியைத் தவிர மற்றொரு தேதி இருக்காது. அந்த வெள்ளிக்கிழமை என்ற 24 மணிநேரங்கள் கொண்ட அந்த நாளில் மட்டும்தான் ஜூம்ஆ எனும் 2 ரக்அத்துகள் கொண்ட தொழுiகைத் தொழுவோம். வியாழன், வெள்ளி, சனிக் கிழமைகள் என்று ஒன்றுக்கு மேற்பட்ட நாட்களில் ஜூம்ஆத் தொழுகையை நாம் தொழ மாட்டோம். ஆக சங்கமம் நடைபெறும் போது இரண்டு கிழமைகள் (நாட்கள்) இருக்கும் என்றால், குறிப்பிட்ட அந்தந்த நாட்கள் குறிப்பிட்ட ஒருவ்வொரு தேதிக்கும் உரியது. எனவே 24 மணிநேரங்கள் கொண்ட ஒருநாளுக்குள் நோன்பைத் துவங்கவோ, பெருநாளை கொண்டாடவோ முடியாது என்பது தவறான வாதமாகும். மேலும் இது திட்டமிட்டு திரித்துக் கூறுவதும் ஆகும்.

 

 

 

 


 

Visit : www.mooncalendar.in

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved