முதல் பக்கம்

வீடியோ

ஆய்வுகள்

கட்டுரைகள்

வரலாறு

இஸ்லாம்

தமிழ் குர்ஆன்

   

 

Go to Index                   


 

கிப்லா சம்பந்தமான குர்ஆன் வசனங்கள் கூறுவது என்ன?


மக்காவை மையப்பகுதியாகவும், மக்காவின் நேர்எதிர் பகுதியை புதிய தேதிக்கோடாகவும் மாற்றி அமைக்கவும் வேண்டும் ததஜ பிறைவாசிகளின் மனோ இச்சை பற்றி ஏற்கனவே விளக்கியிருக்கிறோம்.

கிப்லா குறித்து ததஜ பிறைவாசிகளுக்கு நாம் அளித்துள்ள பிற விளக்கங்களையும் அவசியம் பார்வையிடவும்.

தேதிக்கோட்டை மாற்றத் துடிக்கும் ததஜவின் கனவு நிறைவேறுமா?

கிப்லாவை மாற்றியது யார்?

பூமியின் மேற்பரப்பில் மத்தியப் பகுதி என்று வரையறுக்க முடியுமா?

பூமியின் மையப்பகுதி மக்கா நகரமா? சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா?

வாட்சப் போன்ற சமூக ஊடகங்களில் இவர்களின் தவறான பிரச்சாரத்தை நம்பி, அல்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸூரத்துல் பகராவின் 142 முதல் 150 வரையுள்ள வசனங்களுக்கும் இவர்களின் பிரச்சாரத்திற்கும் என்ன தொடர்பு? என்று கேட்கின்றனர். ததஜ பிறைவாசிகளின் கற்பனை கூற்றுக்கும் அல்குர்ஆனின் மேற்படி வசன்களுக்கும் எள் முனையளவும் சம்பந்தம் இல்லை என்பதை தெளிவாக விளங்க வேண்டும்.

அல்குர்ஆன் சூரத்துல் பகராவில் இடம்பெரும் கிப்லா பற்றிய வசனங்களில் 'ஷத்ரல் மஸ்ஜிதில் ஹராம்' என்பதற்கு சகோதரர் பீஜே அவர்கள் தான் குர்ஆன் மொழிபெயர்ப்பில், 'மஸ்ஜிதுல் ஹராமின் திசை' என்றுதான் மொழி பெயர்த்துள்ளார். ஆனால் ததஜ பிறைவாசிகளோ பெரியவட்டக் கோட்பாடு, பூமியின் மையப்பகுதி, கஃபாவுக்கு எதிர்பக்கம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்கள். பிறை விஷயத்தில் தங்களை களம் இறக்கிய அண்ணனுக்கு பாடம் நடத்துவதையும் பிறைவாசிகளின் தங்கள் கடமையாக கொண்டுள்ளனர். இதை ஏற்கனவே படித்திருப்பீர்கள். பார்க்க

கிப்லா சம்பந்தமான குர்ஆன் வசனங்களின் சுருக்கமான விளக்கங்கள் பின்வருமாறு...

ஹிஜ்ரத்திற்குப் பின்னர், நபி (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் அல்லாஹ்வின் கட்டளைபடி சுமார் 16 மாதங்கள் வரை ஜெரூசலத்திலுள்ள பைத்துல் முகத்திஸை நோக்கி தொழுதனர். இச்செய்கையை பார்த்த அன்றைய காலத்து யூதர்கள் முஸ்லிம்களை பரிகசித்தனர். நபி (ஸல்) அவர்கள் மக்காவிலுள்ள புனித கஅபாவின் திசையை முன்னோக்கி தொழுவதையே விரும்பினர். தாங்கள் விரும்பியது போல கிப்லாவின் திசை மாற்றப்படாதா என்று அடிக்கடி வானத்தை பார்க்கும் அளவுக்கு நபி (ஸல்) அவர்கள் ஏங்கினார்கள்.

மதீனாவில் முஸ்லிம்கள் தொழுது கொண்டிருக்கும் போதே நபி (ஸல்) அவர்கள் விரும்பியபடி கிப்லா மாற்றம் குறித்து இறைகட்டளையும் வந்தது. ''(நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் (இருக்கும்) திசையில் திருப்புவீராக!' என்று வல்ல அல்லாஹ் கட்டளையிட்டான். இந்த கிப்லா மாற்றம் என்ற நிகழ்வானது, நபி (ஸல்) அவர்களை தூதராக முற்றிலுமாக ஏற்று நடந்தவர்கள் யார்? என்பதை பிரித்தறிவிப்பதாக இருந்தது. மேலும் அல்லாஹ்வுடைய நேர்வழி கிடைக்கப் பெறாதவர்களுக்கு இச்சம்பவம் பெரும் சுமையாகவும் இருந்தது. இதுதான் அல்குர்ஆனின் 2:142 முதல் 2:150 வரையுள்ள வசனங்கள் கூறும் சுருக்கமான கருத்தாகும்.

குர்ஆன் விரிவுரையாளர்கள் அனைவரின் கருத்தும் இவ்வாறுதான் உள்ளது. இக்கருத்துதான் சரி என்பதை தெளிவுபடுத்திடும் பல ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் காணக் கிடைக்கின்றன. இந்நிலையில் மக்காவை மையப்பகுதியாகவும், மக்காவின் நேர்எதிர் பகுதியை புதிய தேதிக்கோடாகவும் மாற்றி அமைக்க மேற்படி வசனங்கள் எப்படி ஆதாரமாக அமையும் என்பதுதான் ஆச்சரியம்.

''(நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் (இருக்கும்) திசையில் திருப்புவீராக!'' (2:144,149,150) என்ற கட்டளை இவ்வசனங்களில் மூன்று முறை இடம்பெற்றுள்ளது. இதை வைத்துக் கொண்டு, ''பார்த்தீர்களா அல்லாஹ்வே கட்டளையிட்டு விட்டான். கஅபாவுக்குள்ள முக்கியத்துவத்தை பார்த்தீர்களா? எனவே மக்காவைத்தான் நாம் மையப்படுத்த வேண்டும்' என்று ஆர்ப்பரிப்பது அறிவுடையாகுமா? கஅபாவுக்கு முக்கியத்தும் இல்லை என்று யார் சொன்னது? நாமும் மறுக்கவில்லையே!. இறைக் கட்டளைபடி நாமும் கஅபாவின் திசையை நோக்கித்தானே தொழுது வருகிறோம். இமயமலையை நோக்கி தொழுது கொள்ளுங்கள் என்றோ, தாஜ்மஹாலின் திசையை நோக்கி தொழுங்கள் என்றோ நம்மில் யாரும் பிரசாரம் செய்யவில்லையே.

கிப்லாவை முன்னோக்குதல் என்ற அம்சத்திலிருந்து, மக்காவை மையப்பகுதியாகவும், மக்காவின் நேர்எதிர் பகுதியை புதிய தேதிக்கோடாகவும் மாற்றி அமைக்கவும் வேண்டும் என்ற நிலைப்பாட்டை இவர்கள் எப்படி எடுத்தார்கள்? என்பதுதான் நமது கேள்வி. மக்காவுக்கு உள்ள சிறப்புகளோ, கிப்லாவுடைய வசனங்களோ, அதை உலகின் மத்தியப் பகுதியாக ஆக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் இல்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.

மேற்காண்ட வசனங்களில் இடம்பெறும் 'ஷத்ரல் மஸ்ஜிதில் ஹராம்' என்ற வாக்கியத்தில் 'ஷத்ர்' என்றால் 'ஜிஹத்து' என்று பொருள்படும். அதாவது 'திசை', 'இலக்கு', 'முன்னோக்குதல்', அல்லது 'அதன் பக்கம்' என்று பொருள்படும். 'கிப்லா' என்ற சொல்லானது முன்னோக்கும் திசையைக் குறிக்கும்.

இவற்றை ஏன் இங்கு குறிப்பிடுகிறோம் என்றால், 'முஸ்லிம்கள் முன்னோக்கும் திசை' என்று நாம் கிப்லா பற்றி குறிப்பிடும் போது ஹிஜ்ரி கமிட்டியை குறை கூறுவதற்காகவே உயிர்வாழக்கூடிய அண்ணனின் இந்த தம்பிமார்கள் நம்மை நையாண்டி செய்தனர். 'திக்கை வணங்கும் துலுக்கர்கள் என்ற பாரதியாரின் பாடலுக்கு நாம் வலுசேர்ப்பதாக' எழுதி நம்மை நையாண்டி செய்தனர். அவர்களை அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறோம். ஹஜ்ரி கமிட்டியினரை இப்படி நைய்யாண்டி செய்வதால்,

தமிழகம் என்ற மாநில அளவு எல்லைக்குள்தான் பிறை பார்க்க வேண்டும் என்ற ததஜவின் நிலைப்பாடு சரியானதுதான் என்றாகிவிடுமா?

மாதத்தின் 29 நாள் பின்னேரம் மஃரிபு நேரத்தில் மேற்குத் திசையில் பிறையை பார்ப்பதுதான் மார்க்கம் சட்டம் என்ற வாதத்தை நிரூபிக்க முடியுமா?

பிறையானது மேற்குத் திசையில் உதித்து கிழக்குத் திசையில் மறைவதாக சகோதரர் பீஜே அவர்கள் சொன்னது சரி என்று நிரூபனம் ஆகிவிடுமா?
நடுநிலையான ததஜ சகோதரர்கள் சற்று சொல்லட்டும்.

இவர்கள் கிப்லா வசனங்களையும் மன்போக்கில் திரித்து, சர்வதேசத்தேதிக்கோட்டை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் எழுதி வருகின்றனர். பிறை விஷயத்தில் தமிழக எல்லையையே தாண்டாத இவர்கள் மக்காவைப் பற்றியும், சர்வதேசத்தேதிக் கோட்டை பற்றியும் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?

இங்கு நாம் குறிப்பிட வருவது, 'ஷத்ர்' பற்றியும், 'கிப்லா' பற்றியும் முற்கால இஸ்லாமிய அறிஞர்களின் பல்வேறு ஆய்வுகளை செய்து, பல அரிய குறிப்புகளையும் இவ்வுலகிற்கு தந்துள்ளனர். அவ்வறிஞர்களும் அல்குர்ஆனின் 2:142 முதல் 2:150 வரையுள்ள இதே வசனங்களை ஆய்வு செய்துள்ளனர். அவர்களில் யாரும் மக்காவை மையப்பகுதியாகவும், மக்காவின் நேர்எதிர் பகுதியை புதிய தேதிக்கோடாகவும் மாற்றி அமைக்க வேண்டும் என்று மேற்படி வசனங்கள் தெரிவிப்பதாகக் கூறவில்லை.

தொழுகைக்காக கஅபாவை முன்னோக்குதல் என்பதில், கஅபாவை நேருக்குநேராக மிகச்சரியாக (ஐனுல் கஅபா) முன்னோக்க வேண்டுமா? என்ற கேள்விகளுக்கு இஸ்லாமிய அறிஞர்களுக்கிடையே பல கருத்துப் பறிமாற்றங்களும் நடைபெற்றுள்ளன.

பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்து என்னவெனில், ''யார் கஅபாவுக்கு நெருக்கமாகவும், அதை பார்க்கும் அளவிலும் இருக்கிறார்களோ அவர் கஅபாவை மிக நேர்த்தியான முறையில் முன்னோக்க வேண்டும். யார் கஅபாவுக்கு தொலைவிலும், அதை பார்க்க இயலாத தூரத்திலும் உள்ளார்களோ அவர்கள் கஅபாவுடைய திசையை முன்னோக்கட்டும்'' என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். ''பயணத்தின் போதோ அல்லது கிப்லாவின் திசையை அறிய முடியாத சூழ்நிலையில் இருந்தாலோ, கிப்லாவின் திசையை ஓரளவு யூகித்துக் கொண்டு தொழுகையை நிறைவேற்றிவிட வேண்டும்'' என்றும் முற்கால இஸ்லாமிய அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.

இதில் நாம் தெரிவிப்பது என்னவெனில், இவ்வறிஞர்களும் அல்குர்ஆனின் 2:142 முதல் 2:150 வரையுள்ள இந்த வசனங்களை மேற்கோள்காட்டியே தீர்ப்பு வழங்கியுள்ளனர். இப்படி கிப்லா பற்றிய குர்ஆன் ஹதீஸ்களை ஆய்வு செய்தவர்கள் யாரும் தங்கள் ஆய்வறிக்கைகளில் மக்காவை உலகிற்கு மையப் பகுதியாக வைக்க வேண்டும் என்றோ, மக்காவின் நேர்எதிர் பகுதியை புதிய தேதிக்கோடாக மாற்றி அமைக்க வேண்டும் என்றோ எங்கும் குறிப்பிடவில்லை. மேற்படி கிப்லாவின் வசனங்கள் இதற்கு ஆதாரமாக எந்த அறிஞர்களும் கூறவில்லை. எனவே அல்குர்ஆன் ஸூரத்துல் பகராவின் 142 முதல் 150 வரையுள்ள வசனங்கள் மாற்றுக் கருத்துடையோருக்கு ஒருபோதும் ஆதாரமாக அமையாது.

புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை... அல்குர்ஆன் (2 : 177)

கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம். நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன், எல்லாம் அறிந்தவன். அல்குர்ஆன் (2 : 115)

 


 


 

 


 

Visit : www.mooncalendar.in

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved