முதல் பக்கம்

வீடியோ

ஆய்வுகள்

கட்டுரைகள்

வரலாறு

இஸ்லாம்

தமிழ் குர்ஆன்

   

 

Go to Index                   


 

பீஜே VS பிறைவாசி

பிறை மேற்கில் உதிக்கிறது, பிறை மேற்கில் உதித்து கிழக்கில் மறைகிறது, பிறை பிறந்தால்தான் நாள் ஆரம்பிக்கிறது, ஸஹாபாக்கள் ஹிஜ்ரி ஆண்டுக் கணக்கீட்டில் தவறு இழைத்து விட்டார்கள், ஆங்கிலக் காலண்டர் பின்பற்ற லேசாக இருக்கிறது – லேசானதுதான் மார்க்கம் என்றெல்லாம் பீஜே அவர்கள் தவறான பல கருத்துக்களை மார்க்கம் என்ற பெயரில் போதித்துள்ளார்.

பிறை விஷயத்தில் சகோதரர் பீஜே அவர்களின் தவறான போதனைகளையும், நிலைபாடுகளையும் தக்க ஆதாரங்களோடு ஹிஜ்ரிகமிட்டியினர் உலகிற்கு தெளிவுபடுத்தினர். இதனால் ததஜவிற்கு ஹிஜ்ரி கமிட்டியினர் மீது கடும் கோபம் ஏற்பட்டது. தனது தவறை திருத்திக் கொள்ள முன்வராத ததஜ தலைமை, 'பிறைவாசி' என்ற புனைப்பெயரில் ஹிஜ்ரி கமிட்டியினரை திட்டி தீர்ப்பதற்காக சில இளைஞர்களை ஏற்பாடு செய்தனர்.

அவர்களும் ஹிஜ்ரி கமிட்டி சொல்லாத விஷயங்களை எல்லாம் சொன்னதாக அவதூறு பரப்பி வருகின்றனர். பிறை, காலண்டர், விஞ்ஞானம், கிப்லா, தொழுகைநேரம் என்று தலைப்பிட்டு தங்கள் கற்பனையில் உதித்தவற்றை எல்லாம் எழுதி ஹிஜ்ரி கமிட்டியை தரம்தாழ்ந்து விமர்சிக்கின்றனர். அறிவுக்குப் பொருந்தாத வாதப் பிரதிவாதங்களை தாங்களாகவே எழுப்பி, அவற்றிற்கு பதில் என்று பக்கம்பக்கமாக புளுகுமூட்டைகளை அள்ளி வீசி வருகின்றனர்.

இவர்கள் தங்கள் திருப்பணியை செவ்வனே செய்யட்டும், அப்போதுதான் ததஜவிலுள்ள சொற்பமான நியாயவான்களும் அதைவிட்டும் வெளியேறுவார்கள் என்று இவர்களின் வசைமொழிகளை கண்டுகொள்ளாமல் ஹிஜ்ரிகமிட்டியினர் அலட்சியம் செய்தே வருகின்றனர்.

இவ்வாறு ஹிஜ்ரி கமிட்டியை விமர்சிக்க வந்த பிறைவாசி கும்பல் தற்போது சகோதரர் பீஜேவுக்கும் எதிராக திரும்பியுள்ளது. பீஜே அவர்கள் நட்சத்திரங்கள் பற்றி மொழி பெயர்த்துள்ள பல்வேறு குர்ஆன் வசனங்களையும் இந்த பிறைவாசியினர் 'ராசிகள்' என்று மாற்றி மொழி பெயர்த்துள்ளனர். அதாவது இந்து பஞ்சாங்கத்தில் இடம் பெறும் மிதுனம், துலாம், மகரம், கன்னி, விருச்சிகம் போன்ற ராசிகளைத்தான் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறானாம். அத்தகைய வசனங்களுக்கு சகோதரர் பீஜே அவர்கள் தவறாக மொழி பெயர்த்து விட்டாராம். ரெம்ப சூப்பர்தான் போங்க..!!

சகோதரர் பீஜே அவர்கள் மொழிபெயர்த்துள்ள திருக்குர்ஆன் மற்றும் பல்வேறு ஹதீஸ்களின் மொழிபெயர்ப்புகள் தவறாக உள்ளன என்றும் தாங்கள்தான் சரியாக மொழிபெயர்த்துள்ளோம் என்ற பாணியில் புதிய மொழிபெயர்ப்புகளை பதிந்து வருகின்றனர். ஹிஜ்ரி கமிட்டியினரை விமர்ச்சித்து வரும் இவர்களை பிஜேவையும் விமர்சிக்கும் நிலைக்கு அல்லாஹ் தள்ளி விட்டான்.

சமீபத்தில் இவர்கள் பரப்பி வரும் கட்டுரையிலிருந்து உதாரணத்திற்காக 5 வசனங்களின் மொழிபெயர்ப்புகளை மட்டும் இங்கு தருகிறோம்.

சகோ பீஜே மொழிபெயர்ப்பு : பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். 'அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்' எனக் கூறுவீராக! (2:189)

பிறைவாசிகள் மொழிபெயர்ப்பு : ஹிலால்கள் ஹஜ்ஜிக்கும் மக்களின் மற்ற வழிபாடுகளுக்கும் நேரம் குறிக்கப்பட்ட (மவாகீத்) டைம் டேபிள் (2:189)

****************

சகோ பீஜே மொழிபெயர்ப்பு : ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் தான் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான். (10:5)

பிறைவாசிகள் மொழிபெயர்ப்பு : நீங்கள் ஆண்டுகளையும் காலக்கணக்கையும் எண்ணிக்கையில் அறிந்து கொள்ள அதற்கு ராசிகளை (மன்ஸில்களை) ஏற்படுத்தியுள்ளோம் (10:5)

****************

சகோ பீஜே மொழிபெயர்ப்பு : சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். முடிவில் அது காய்ந்த பேரீச்சம் பாளை போல் ஆகிறது. (36:39)

பிறைவாசிகள் மொழிபெயர்ப்பு : மீண்டும் பழைய பேரீத்த மட்டையைப் (முதல் பிறை) போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல ராசிகளை ஏற்படுத்தியிருக்கின்றோம் (36:39)

****************

சகோ பீஜே மொழிபெயர்ப்பு : அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதி தருவதாகவும், சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் எற்பாடு. (6:96)

பிறைவாசிகள் மொழிபெயர்ப்பு : மேலும் ஞாயிறும் திங்களும் கணக்காக இருக்கின்றன (6:96)

****************

சகோ பீஜே மொழிபெயர்ப்பு : சூரியனும், சந்திரனும் கணக்கின்படி இயங்குகின்றன. (55:5)

பிறைவாசிகள் மொழிபெயர்ப்பு : ஞாயிறும் திங்களும் கணக்கில் இருகின்றன (55:5)

இவர்கள் ஹிஜ்ரி கமிட்டியை விமர்சிப்பது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் தங்களை களம் இறக்கிவிட்ட தங்களின் ஆஸ்தான குருவான பீஜேயின் மொழிபெயர்ப்பை திருத்திவிட்டு வரட்டும். ஹிஜ்ரி கமிட்டியினர் ஷைத்தான்கள் என்றும், ரமழான் மாதத்தில்தான் ஹிஜ்ரி கமிட்டியினருக்கு விலங்கிடப்படும் என்றும் எழுதியுள்ளனர். எனவே ஷைத்தான்கள் யார்? என்பதையும் ரமழானின் எந்த ஷைத்தான்களுக்கு விலங்கிடப்பட வேண்டும் என்பதை மக்கள் நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
 


 


 

 


 

Visit : www.mooncalendar.in

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved