முதல் பக்கம்

வீடியோ

ஆய்வுகள்

கட்டுரைகள்

வரலாறு

இஸ்லாம்

தமிழ் குர்ஆன்

   

 

Go to Index                   


 

ஹிஜ்ரிகமிட்டிக்கு அரபி தெரியவில்லை..! ஹதீஸ்களை பலவீனம் என்கின்றனர்..!!

– ததஜ பிறைவாசி பகீர் குற்றச்சாட்டு


ஹிஜ்ரி கமிட்டியினர் அனைத்து ஹதீஸ்களையும் ழயீஃப் என்கிறார்கள் என்று TNTJவின் பிரதான தொண்டர் பிறைவாசி, ஹிஜ்ரி கமிட்டியினர் மீது தனது வழக்கமான அவதூரை பரப்பியுள்ளார். நூற்றுக்கணக்கான ஸஹீஹான ஹதீஸ்களை மறுத்து தங்களை நவீன ஹதீஸ் மறுப்பாளர்களாக இனங்காட்டிக் கொண்ட ததஜவினரைப் பற்றி உலகமே அறிந்துள்ளது. இந்நிலையில் நம்மை நோக்கி இப்படி ஒரு குற்றச்சாட்டு சுமத்துவதற்கு கொஞ்சமாவது வெக்கப்பட வேண்டும். 'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்ற சொல்லடாலுக்கு மேற்கண்ட குற்றச்சாட்டை ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஹிஜ்ரி கமிட்டியினர் தங்கள் மனோ இச்சைபடி எந்த ஹதீஸ்களையும் பலவீனம் என்று ஒருபோதும் அறிவிக்கவில்லை. மாறாக இன்னென்ன ஹதீஸ்கள் பலவீனமானவை, இட்டுகட்டப்பட்டவை என்று முற்கால ஹதீஸ்கலை ஆய்வாளர்களான கண்ணியமிகு இமாம்கள் தரம்பிரித்து இனம் காட்டியவற்றை ஹிஜ்ரி கமிட்டியினர் எடுத்துச் சொல்கிறார்கள். ஹிஜ்ரி கமிட்டியினர் ஹதீஸ்களை மறுக்கிறார்கள் என்று போகிற போக்கில் விமர்சிப்பது நியாயம்தானா? இவர்கள் உண்மையாளராக இருந்தால் எந்தெந்த ஹதீஸ்களை ஹிஜ்ரி கமிட்டியினர் மறுக்கின்றனர்? என்பதை ஆதாரப்பூர்வமாக சுட்டிக்காட்டியிருக்க வேண்டும் அல்லவா?

கீழ்க்காணும் தொடுப்புகளில் நாம் பட்டியலிட்டுள்ள பலவீனமான ஹதீஸ்களை அரைகுறையாக படித்துவிட்டு ததஜவினர் இவ்வாறு வாதம் எழுப்பியுள்ளனர்.

http://ottrumai.net/Pirai/12.WeakHadheesPart-1.htm

ttp://ottrumai.net/Pirai/13.WeakHadheesPart-2.htm

http://ottrumai.net/Caravan/index.htm

இவ்வாறு முற்கால ஹதீஸ்கலை இமாம்கள் ழயீஃப் என்றும், இட்டுக்கட்டப்பட்டது என்றும் தூக்கியெறிந்த செய்திகளை எல்லாம் தனக்கு ஆதாரம் என்று நினைத்துக் கொண்டு இவர்கள் ஹதீஸ் என்று வாதித்தால் அவற்றை பலவீனமானது என்று விளக்குவது எங்கள் மீது கடமையில்லையா?

ஒரு ஹதீஸ் பலவீனமானது என்று எங்கள் மனோ இச்சை அடிப்படையில் என்றும், எங்கும் சொல்லியதில்லையே? ஏன் இப்படி அவதூறை சுமத்துகிறார்கள்? TNTJ வின் மாநிலப்பிறை நிலைப்பாட்டுக்கு அத்தகைய பலவீனமான ஹதீஸ்களையே அவர்கள் ஆதாரமாகக் கருதுவதால், ஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகள் அவர்களுக்கு கோபத்தை உண்டாக்குகிறது.

மேலும் ''நிச்சயமாக அல்லாஹ் பிறைகளை மனித சமுதாயத்திற்கு தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான்' என்று தொடங்கும் முஸன்னஃப் அப்துர்ரஸாக்கின் ஸஹீஹான (7306) ஹதீஸை இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்த ஹதீஸின் வாசகங்கள் அல்குர்ஆனின் 2:189-வது வசனத்தைத் தழுவி அமைந்துள்ளதை காணலாம். அல்குர்ஆனை விளக்கித்தர வந்த இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களின் சொற்கள் அப்படிதானே அமையும். மேற்படி முஸன்னஃப் அப்துர்ரஸாக் ஹதீஸ் கிரந்தத்தில் இடம்பெறும் இந்த ஹதீஸூம், பிறைகள் நாட்காட்டியாக உள்ளன என்றுகூறி ஹிஜ்ரி காலண்டருக்கு சாட்சி பகர்வதால் TNTJவினருக்கு இந்த ஹதீஸ்மீதும் கடும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்னோட்டமாகத்தான் 'இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது' என்று இந்த TNTJ தொண்டர் சொல்கிறார். விரைவில் இந்த ஹதீஸூம் TNTJவின் ஹதீஸ் மறுப்பு பட்;டியலில் இடம்பெறலாம்.

இன்னும் ஹிஜ்ரி கமிட்டிக்கு ஹதீஸ்கலை தெரியவில்லையாம்! அரபியும் தெரியவில்லையாம்!!. TNTJ பிறைவாசி ரெம்பவும்தான் கவலைப்பட்டு விட்டார் போலும். அரபு மொழியையே தெரியாதவர்களால் ஒரு ஹதீஸை ஸஹீஹ், ழயீஃப் என்று எப்படி கூற முடியும்? என்ற சிந்தனைகூட இவர்களுக்கு இல்லை. ஹிஜ்ரி கமிட்டிக்கு அரபி தெரியவில்லை என்று கூறிவிட்டு, ஹதீஸை ழயீஃபாக்குகிறார்கள் என்றும் சொல்வது முரண்பாடாக இல்லையா?

ஹிஜ்ரி கமிட்டிக்கு அரபு தெரியுமா? தெரியாதா? என்ற கவலை TNTJ தொண்டனுக்கு அவசியமில்லை. மாறாக பிறை எந்த திசையில் உதிக்கிறது? என்றுகூட தெரியாத நிலையில் தங்களின் ஒரிஜினல் தலைவர் பீஜே உள்ளதை பற்றி முதலில் கவலை கொள்ளட்டும். சந்திரன் மேற்கில் உதித்து கிழக்கில் மறைகிறது என்று பீஜே சொல்வதும், TNTJவினர் அதை ஏற்று தலையசைப்பதும்தான் ஹதீஸ்கலை ஆய்வின் உச்சகட்டம் என்று இனி பிறைவாசிகள் சொன்னாலும் சொல்வார்கள்.

 


 


 

 


 

Visit : www.mooncalendar.in

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved