முதல் பக்கம்

வீடியோ

ஆய்வுகள்

கட்டுரைகள்

வரலாறு

இஸ்லாம்

தமிழ் குர்ஆன்

   

 

Go to Index                   


 

முஹல்லா ஒருங்கிணைப்பே தமிழகப்பிறைக்கு ஆதாரம் - ததஜ புதிய தீர்வு..!!

ததஜவின் பிறை நிலைப்பாட்டின் படி பிறையை 29-வது நாள் மாலை 30-வது நாள் இரவு, மேற்குத் திசையில், மஃரிபு நேரத்தில் புறக்கண்ணால் பார்க்க வேண்டும். அதுவும் தமிழக எல்லைக்குள் மட்டுமே பிறை பார்க்கப்பட வேண்டும். தமிழகம் தாண்டி வரும் பிறைத் தகவலை ஏற்கக்கூடாது என்பதே இவர்களின் பிறை நிலைப்பாடு.

இதற்கு குர்ஆனிலிருந்து நேரடியான ஆதாரத்தை தாருங்கள் என்று கேட்டோம், தரவில்லை. தமிழகம் என்ற ஒரு மாநில எல்லைதான் பிறைபார்க்கும் அளவுகோள் என்பதற்கு ஆதாரமாக ஸஹீஹான ஹதீஸைத் தாருங்கள் என்று கேட்டோம். மாநில எல்கை என்பதற்கு நேரடியான ஹதீஸ் ஆதாரத்தை பிஜேயாலும் தரமுடியவில்லை, பிறைவேஷங்களாலும் தரமுடியவில்லை.

மாறாக 'தமிழ்' என்ற ஒரு மொழி பேசுகிறோம் அதனால் தமிழக எல்லையில் பிறை பார்க்கிறோம் என்று மொழி அடிப்படையிலான வரட்டு வாதத்தை முன் வைத்தனர். பாண்டிச்சேரி மக்கள் கிரேக்க, ரஷ்ய மொழிகளையா தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்? அங்கும் தமிழ்மொழிதானே உள்ளது. பாண்டிச்சேரியில் பிறை பார்க்கப்பட்டால் அந்த தகவலை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? என்று கேட்டோம். உறுப்படியான பதில் வரவில்லை.

இலங்கை, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாகவும், பண்பாட்டு மொழியாகவும் உள்ளதே எப்படி வசதி? என்று கேட்டோம். தமிழ்மொழிப் பற்றை வெளிப்படுத்தும் வகையில் அங்கிருந்து வரும் பிறைத் தகவலைலும் ஏற்றுக்கொள்ளுங்களேன் என்றோம். தமிழ்மொழி என்ற சொத்தை வாதத்தை அத்தோடு கைவிட்டனர்.

பின்னர் தமிழ்நாடு என்ற மாநிலம் ஒரு ஆட்சியின் கீழ் உள்ளது, அதனால்தான் தமிழக எல்கை என்கிறோம் என்றனர். மாநில அரசு என்பதைவிட பெரிய ஆட்சி அதிகாரமாக மத்திய அரசு உள்ளதே. எனவே இந்திய தேசியப்பிறை என்று எல்கையை விரிவுபடுத்த என்ன தடை? என்று கேட்டோம். மத்தியில் கூட்டு ஆட்சி மாநிலத்தில் சுயாட்சி தத்துவத்தையும் தற்போது கைகழுவி விட்டனர்.

இந்நிலையில், அதிரடியாக மற்றொரு முடிவை பிறைவாசி பீலா மன்னன்கள் அறிவித்துள்ளனர். அதாவது ''ததஜ தலைமையால் மாநில அளவுக்கு முஹல்லாக்களை ஒன்றிணைக்க முடிகிறது. எனவேதான் பிறை பார்க்கும் எல்லையை தமிழக அளவு என்று வரையறுத்திருக்கிறோம் இதுதான் தமிழக எல்கைக்கு ஆதாரம்'' என்ற முடிவை அறிவித்துள்ளனர்.

ததஜ நிர்வாகத்தால் தமிழக முஹல்லாக்களை மட்டும் ஒன்றிணைக்க முடிகிறது. அதனால் பிறை பார்க்கும் அளவுகோள் தமிழகம் என்ற ஒரு மாநில அளவு என்று கூறியுள்ளனர். அதுபோல SLTJ தலைமைக்கு இலங்கை என்ற ஒரு நாட்டளவுக்கு உள்ள முஹல்லாக்களை ஒருங்கிணைக்க முடிகிறது. அதனால் SLTJ தேசியப் பிறையை பின்பற்றுகிறதாம். நல்ல இருக்குங்க இவங்க பிறை நிலைப்பாடு.

இது குறித்து நமது கேள்விகள்:-

மேற்கண்ட விளக்கத்தை ததஜவின் தலைமை மாலுமி, ஈடு இணையற்ற நிரந்தர மாலுமி அண்ணன் பீஜே ஏற்றுக் கொள்கிறாரா? இது ததஜவின் கொள்கை முடிவுதானா? அல்லது பிறைவாசி, பிறை மீரான் போன்ற கதாபாத்திரங்களின் வழமையான உளரல்கள்தானா இதுவும்?

பிறை விஷயத்தில் TNTJ யையும், SLTJ யையும் தனித்தனியாக பிரித்து சொல்கின்றனர். ததஜ போட்ட குட்டிதானே SLTJ? தேசியப் பிறை என்ற நிலை எடுத்து, குட்டி 16 அடி பாய்ந்திருக்கலாம். ஆனாலும் SLTJ யின் மூக்கணாங்கயிறும் ததஜ தலைமை மாலுமியிடம்தானே இருக்கிறது. பிறை விஷயத்தில் TNTJ நிலைபாட்டையும், SLTJ நிலைபாட்டையும் ஒன்றிணைத்து தெற்காசியப் பிறை என்ற அகண்ட பவுண்டரியை நோக்கி பயணிக்கலாமே. அகண்ட பாரதத்தை கனவைப்போல அகண்ட எல்லையாகவும் அது அமையுமே? ததஜ தலைமைக்குத்தான் முஹல்லாக்களை ஒன்றிணைக்கும் அசாத்திய சக்தி இருக்கிறது அல்லவா?

பாண்டிச்சேரியின் (புதுவை) முஹல்லாக்களை ததஜவின் பாண்டிச்சேரி கிளையால் ஒன்றிணைக்க முடியுமா? முடியாதா? பாண்டிச்சேரியில் பார்க்கப்பட்ட பிறையை தமிழகத்தில் ஏற்றுக் கொள்வீர்களா? மாட்டீர்களா? பாண்டிச்சேரி ததஜ வாசிகளுக்கு தலைமை நிர்வாகம் எது?

இதே முஹல்லா ஒருங்கிணைப்பு பாலிஸி கேரளாவுக்கு பொருந்துமா? பொருந்தாதா? கேரளா எல்கையில் இருக்கும் களியக்காவிளை ததஜ வாசிகள் எங்குள்ள முஹல்லா ஒருங்கிணைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்?

இந்தியாவின் பகுதியாக இருந்த கட்சத்தீவு சமீபத்தில்தான் இலங்கைக்கு தாரைவாக்கப்பட்டது. கட்சத்தீவு மக்கள் யாருடைய பிறை நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டும்? என்று நமது சகோதரர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு கட்சத்தீவில் அந்தோணியார் கோவில்தான் உள்ளதாகவும், அங்கு முஸ்லிம்கள் இல்லை எனவும், ஆளில்லாத கடையில் ஏன் டீ ஆத்துகிறீர்கள்? என்று ததஜ வின் வழமையான பாணியில் நைய்யாண்டியை பதிலாக தந்துள்ளனர்.

அப்படியானால், கட்சத்தீவு அந்தோணியார் கோவில் விசேஷத்திற்காக அங்கு ததஜ பிறைவாசி கடைபோட்டு டீ விற்கப்போகும் வேளையில் அங்கு பிறை பார்த்தால், ததஜ தலைமை அதை ஏற்றுக் கொள்ளுமா? அல்லது அது இலங்கை SLTJ காரனுக்குரிய பிறைத் தகவல் என்று புறக்கணிக்குமா? என்று கேட்கிறோம்.

உங்களைவிட பெரிய நிர்வாகமும் அதிகமான மக்கள் தொகையும் கொண்ட, இந்திய அளவில் முஹல்லாக்களை நிர்வகிக்கின்ற சுன்னத் வல் ஜமாஅத், தப்லீக் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, பாப்புலர் பிரண்ட் போன்ற அமைப்புகள் நாளை இந்திய தேசியப்பிறை என்ற அளவுகோளை அறிவித்தால் உங்கள் நிலை என்ன? நீங்கள் இன்று புரியக்கூடிய சப்பை கட்டு வாதங்கள் நாளை இந்திய தேசியப் பிறைக்கும் பொருந்துமல்லவா? பதிலைச் சொல்லுங்கள் பிறைவாசிகளே..!!

இவர்கள் முஹல்லாக்களை ஒருங்கிணைக்கிறார்களாம். ஒற்றுமையோடு இருக்கின்ற முஹல்லாக்களை கூறுபோட்டு பிரிக்காமல் விட்டால் சரி. 


 


 

 


 

Visit : www.mooncalendar.in

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved