முதல் பக்கம்

வீடியோ

ஆய்வுகள்

கட்டுரைகள்

வரலாறு

இஸ்லாம்

தமிழ் குர்ஆன்

   

 

Go to Index                   


 

ததஜ பிறைவாசிகள் 'டபுள் அமாவாசைகளே'..!

ததஜவின் தமிழகப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்க ஆதாரமில்லை என்பதையும், பீஜே வுக்கு பிறை குறித்த அடிப்படை அறிவுகள் இல்லை என்பதையும் நாம் வெளிச்சம் போட்டு காட்டி விட்டதால் அண்ணன் மீது பக்தி கொண்ட இவர்கள் பொதுத்தளங்களில் நம்மை மிகவும் அநாகரிகமாக விமர்சித்து வருகின்றனர்.

ஹிஜ்ரி கமிட்டியினர் அமாவாசைகள், ஹிஜ்ரி கமிட்டி அமாவாசை கமிட்டி.

ஹிஜ்ரி காலண்டர் யூதக்காலண்டர், ஹிஜ்ரி கமிட்டியினர் யூத கைக்கூலிகள்.

சகோதரர் அலிமனிக்பான் அவர்களை நபியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். (அஸ்தஃபிருல்லாஹ்)

அலிமனிக்பானின் மற்றொரு பெயர் எலிடோனோமிக். அவர் அமாவiசையைப் பார்த்து நோன்பு வையுங்கள் அமாவாசையைப் பார்த்து நோன்பை விடுங்கள் என்று ஹிஜ்ரி கமிட்டியினருக்கு தீர்க்க தரிசனம் வழங்கியுள்ளார்.


என்றெல்லாம் அறிவுக்கு பொருந்தாத வசைமாறிகளை இப்பிறைவாசிகள் நம்மீது பொழிந்து வருகின்றனர். இப்படி தரம்தாழ்ந்து நம்மை விமர்சித்து விட்டதால் இவர்களின் தமிழகப்பிறை நிலைபாடு ஆதாரப்பூர்வமானது என்று ஆகிவிடுமா என்ன?

மாதத்தின் அனைத்து பிறைகளையும் கவனமாக கண்காணித்தும், துல்லியமாக கணக்கிட்டும் அமைக்கப்பட்டதே ஹிஜ்ரி காலண்டர். ஹிஜ்ரி நாட்காட்டியின் கணக்கீடு வழிமுறைக்கு குர்ஆனிலிருந்து நேரடியான ஆதாரத்தை வழங்கியுள்ளோம். ஸஹீஹான பல ஹதீஸ்களை ஆதாரமாக சமர்ப்பித்துள்ளோம்.

ஹிஜ்ரி நாட்காட்டியை பின்பற்றுவதற்கு இவ்விரண்டும் போதுமானது என்றாலும், ஸஹாபாக்களின் நடைமுறையிலிருந்து ஏதேனும் ஆதாரம் உள்ளதா? என்றும் சிலர் கேட்டனர். அவர்களுக்காக பிறை கணக்கீட்டிற்கு சான்று பகரும் ஸஹாபாக்களின் வாழ்க்கை வரலாற்றையும் எடுத்துரைத்தோம்.

இன்னும் சிலர் நீங்கள் மட்டும்தானே பிறைக்கணக்கீட்டை சொல்கிறீர்கள் முந்தைய கால இமாம்கள் இதுகுறித்து சட்டம் சொல்லியுள்ளார்களா? என்ற ரீதியில் கேள்வி எழுப்பினர். அவர்களுக்காக பிறைக்கணக்கீட்டை வலியுறுத்திய மத்ஹபு இமாம்களின் கூற்றுகளை ஆதாரமாக சமாப்பித்தோம்.

ததஜ பிறைவாசிகளுக்கு வந்ததே கோபம்..! ததஜவின் நவீன இமாம் பீஜே இருக்க முற்கால இமாம்களின் கூற்றை மக்களுக்கு தெரிவிப்பதா? என்று தங்களின் வழக்கமான பாணியில் நம்மை நைய்யாண்டி செய்தனர். ஆனாலும் நாம் வைத்த வாதங்களையும், இமாம்களின் கூற்றுகளையும் இந்த ததஜ பிறைவாசிகளால் மறுக்க முடியவில்லை.

மேலும் நாம் இமாம்களின் பெயரை பயன்படுத்தி விளம்பரம் செய்து ஹிஜ்ரி காலண்டரை விற்கிறோமாம்? கிருஸ்தவ காலண்டரில் ததஜ லேபிள் ஒட்டி வருடந்தோரும் இவர்கள் விற்பனை செய்வதை அறிந்துள்ள பொதுமக்களிடம் இவர்களின் புழுகுமூட்டை எடுபடுமா?

அடுத்ததாக பிறைக்கணக்கீட்டை வலியுறுத்திய இமாம்களின் கூற்றை பதிவிடும்போது இமாம் ஸூப்கி (ரஹ்) என்பதற்கு பதிலாக 'இமாம் இமாம் ஸூப்கி (ரஹ்)' என்று 'இமாம்' என்பதை இரண்டுமுறை எழுதிவிட்டோமாம். டபுள் இமாம் பட்டம் அளித்து சுன்னத் ஜமாஅத்தினரை சுண்டி இழுக்கிறோமாம். என்ன கிறுக்குத்தனமாக வாதம் பாருங்கள்.

ததஜ பிறைவாசிகள் 'டபுள் அமாவாசைகளே'..!

ததஜவின் கிளை அமைப்பான இலங்கை தவ்ஹீது ஜமாஅத்திற்கு 27-05-2017 அன்று சனிக்கிழமை முதல் நோன்பு. ததஜவுக்கோ அன்று சனிக்கிழமை ஷஅபான் 30. அமாவாசைகள், அமாவாசை கமிட்டி என்று ஹிஜ்ரி கமிட்டியினரை தொடர்ந்து விமர்சித்த ததஜவினரை, ஹிஜ்ரி 1438-ஆம் ரமழான் மாதத்தில் டபுள் அமாவசைக்குறியவர்களாக அல்லாஹ் ஆக்கிவிட்டான். இது என்ன புதுக்கதை என்கிறீர்களா?

கடந்த 25-05-2017 அன்று வியாழக்கிழமை பிறை மறைக்கப்படும் கும்மவுடைய நாளாக இருந்தது. அன்று மஃரிபில் உலகம் முழுவதும் பிறை தெரியாததால் (அது எப்படி தெரியும்?)

சர்வதேசப்பிறையினர்கூட வெள்ளிக்கிழமையை கும்மவுடைய (அமாவாசை) நாளாகக் கருதினர். (அதாவது ஒரு நாளுடைய தொடக்கம் மக்ரிபு என்ற அவர்கள் முடிவின்படி)

மீண்டும் நேற்று 26-05-2017 அன்று வெள்ளிக்கிழமை அன்று தமிழகத்தில் பிறை தென்படாததால் ததஜவினருக்கு மீண்டும் ஒரு கும்மவுடைய நாள் கிடைத்துள்ளது. எனவேதான் சனிக்கிழமை அன்று ஷஃபானை 30ஆக பூர்த்தி செய்துள்ளனர். அதாவது டபுள் அமாவாசை.

வாழ்த்துக்கள் பிறைவாசிகளே..! குர்ஆன் மொழிபெயர்ப்யில் நட்சத்திரத்தை குறித்து வரும் வசனங்களின் பொருளை மாற்றி இந்து பஞ்சங்கத்திலுள்ள ராசிகள்தான் அது என்று கூறிவரும் பிறைவாசிகள், இந்துக்களைப் போல இரண்டு நாட்கள் அமாவாசையை கடைபிடிப்பதில் நமக்கு ஆச்சரியம் ஒன்றுமில்லை.
 

 


 


 

 


 

Visit : www.mooncalendar.in

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved