முதல் பக்கம்

வீடியோ

ஆய்வுகள்

கட்டுரைகள்

வரலாறு

இஸ்லாம்

தமிழ் குர்ஆன்

   

 

Go to Index                   


 

பூமியின் மேற்பரப்பில் மத்தியப் பகுதி என்று வரையறுக்க முடியுமா?

பூமியில் ஒரு பகுதியை மையப்புள்ளியாக அமைப்பதற்கு அறிவியல் ரீதியில் வாய்ப்புள்ளதா? என்பதையு விளக்கும் கட்டுரை இது. ஒரு வட்டம், சதுரம், செவ்வகம் போன்ற வடிவங்களில் எது மத்தியப் பகுதி? என்பதை வரையறுத்துக் கூறிவிட இயலும். அதே நேரத்தில் பந்தைப் போன்ற ஒரு உருண்டை வடிவத்தின் மேற்பகுதியில், எந்தப்புள்ளி மையப் புள்ளி? என்பதை வரையறுத்துக் கூறிவிட இயலாது. காரணம் பந்து உருண்டை வடிவத்தில் இருப்பதால்.

நாம் வாழும் பூமியானது ஒரு உருண்டை வடிவத்தில்கூட இல்லை. அது துருவப்பகுதியில் சற்று தட்டையாகவும், பூமத்தியரேகைப் பகுதியில் சற்று வீங்கியும் கோள வடிவத்திற்கு (Sphere) நெருக்கமான, ஒரு நீள்வட்ட கோள வடிவத்தில் (Oblate Spheroid or Oblate Ellipsoid) பூமி அமைந்துள்ளது. எனவே இத்தகைய வடிவம் கொண்ட பூமியின் மேற்பரப்பில் இருந்து கொண்டு, ஒரு குறிப்பிட்ட பகுதியை குறிப்பிட்டு, இதுதான் மத்தியப் பகுதி என்று எதையும் வரையறுத்து சொல்லிவிட முடியாது. இதுதான் யதார்த்தமான உண்மை.

மக்காவை மையப்பகுதியாக அமைக்க வேண்டும் என்ற கருத்துடையோருக்கு, பூமியின் நிலவியல் கோட்பாடுகள் பற்றியோ, புவியியல் விஞ்ஞானம் பற்றியோ தெளிவான ஞானமில்லாததை காட்டுகிறது. காரணம் நாம் தற்போது வசிக்கும் காலத்தில் உள்ள நாடுகள் மற்றும் கண்டங்களின் (Continents) வடிவ அமைப்பில்தான், உலகம் தோன்றிய நாளிலிருந்து பூமியின் நில அமைப்பு இருந்து வருகிறது என்ற நம்பிக்கையில் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் படிப்படியாகக் குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன். அவன் தீர்ப்பை மாற்றுப்பவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன். அல்குர்ஆன் (13:41)

மனிதர்கள் வாழும் பூமியின் நிலப்பரப்பின் எல்கை பல்வேறு மாற்றங்களுக்கும் உட்பட்டுள்ளது வரலாறு. இன்று புழக்கத்தில் இருக்கும் பூமியின் வரைபடத்தை போன்றுதான் கடந்த 1000 ஆண்டுகளுக்கு முன்னரும் இருந்ததா என்றால், ஆம் என்று உறுதியாகக் கூற முடியாது. நாடுகளின் அமைப்பிலும், கண்டங்களின் எல்கையிலும் காலத்திற்குக் காலம் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை உறுதியாகக் கூற முடியும்.

Continental Drift எனும் கண்டங்கள் உருமாற்றம் பற்றிய கண்டுபிடிப்புகள்,

Pangaea பேஞ்சீ அல்லது பாஜ்சியா என்று அழைக்கப்படும் பூமியின் நிலப்பரப்புகள் ஒன்றோடொண்டு பிரிந்த சாத்தியக் கூறுகள் பற்றிய கருத்துகள்,

கண்டத்தட்டு இயக்கவியல் எனும் Plate Tectonics பற்றிய சமீபத்திய ஆய்வுகள்,

மற்றும் பூமியின் காந்த விசையில் ஏற்படும் மாற்றங்களால் (Shift of earth's magnetic field) நிகழும் நிலவியல் மாற்றங்கள் பற்றிய அறிவியல் கருத்துகள்

போன்றவை பூமியிலுள்ள நிலப்பரப்பும், கண்டங்களின் வடிவமைப்பு காலத்திற்கு காலம் மாறு பட்டிருந்ததற்கும் சாட்சியம் பகர்கின்றன. இவை பற்றிய சிறு குறிப்புகளை பின்வரும் தொடுப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Continental Drift : https://www.youtube.com/watch?v=_5q8hzF9VVE

Pangaee effect : https://www.youtube.com/watch?v=3HDb9Ijynfo

Plate Tectonics : https://en.wikipedia.org/wiki/Plate_tectonics

கிப்லா குறித்து ததஜ பிறைவாசிகளுக்கு நாம் அளித்துள்ள பிற விளக்கங்களையும் அவசியம் பார்வையிடவும்.

தேதிக்கோட்டை மாற்றத் துடிக்கும் ததஜவின் கனவு நிறைவேறுமா?

கிப்லாவை மாற்றியது யார்?

கிப்லா சம்பந்தமான குர்ஆன் வசனங்கள் கூறுவது என்ன?

பூமியின் மையப்பகுதி மக்கா நகரமா? சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா?

சமகாலத்தில் பிறைகள் பற்றிய ஆய்வுக் கருத்துகளை வெளியிட்டு வரும் டாக்டர் காலித் சவுக்கத் அவர்களிடம் புவியியல் ரீதியாக கஅபா உண்மையில் பூமியின் மையத்தில் உள்ளதா? என்ற கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளதை கீழே கொடுத்துள்ளோம். சகோதரர் காலித் சவுக்கத் அவர்கள் சொல்வதெல்லாம் சரி என்றோ, அவரின் கூற்றுகள் நமக்கு ஆதாரம் என்ற அடிப்படையிலோ அதை நாம் இங்கு பதிவிடவில்லை. குறிப்பிட்ட ஒரு இடத்தை பூமியின் மையப்பகுதியாக கருதிட இயலாது என்பதை இதன் மூலம் சுட்டிக் காட்டுகிறோம்.

Question: Is the Ka'bah really at the centre/heart of the Earth geographically?

Answer: No! Ka'bah is not the center of the earth geographically. Earth is a sphere (more or less), and there can be no center on the surface of a sphere. If one can pick a point on the surface of the sphere to be the center, then every point can be considered as the center.

Those who say Ka'bah is the center, are trying to manipulate the argument on flat map or other irrelevant things. I have seen books written on it with absurd arguments. Some say, it is the center of land masses. This is absurd too. By no mathematical means anyone can correctly prove that hypothesis. Moreover, all land masses of the continents are floating in the oceanic waters, which are floating over the molten core of the Earth, and they all shift over a period of time. With such shifting, the center of land masses also shifts. Whoever came up with the notion, "Ka'bah is the centre of the Earth" is trying to prove un-necessary hypthesis.

Source : http://www.moonsighting.com/faq_qd.html

இதன் தமிழாக்கம் பின்வருமாறு :-

கேள்வி : புவியியல் ரீதியாக கஅபா உண்மையில் பூமியின் மையத்தில் உள்ளதா?

பதில் : இல்லை! கஅபா புவியியல் ரீதியாக பூமியின் மையப் பகுதியில் இல்லை. பூமியானது (சற்றொப்ப) ஒரு கோள வடிவம் கொண்டது. ஒரு கோளத்தின் மேற்பரப்பில் எந்த மையப் பகுதியும் இருக்க முடியாது. ஒரு கோளத்தின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியை மையப் புள்ளியாக எடுக்க முடியும் என்றால், அக்கோளத்தின் ஒவ்வொரு புள்ளியையும் மையமாகக் கருதலாம்.

புனித கஅபாவானது பூமியின் மையப் பகுதியாக உள்ளது என்று கூறுபவர்கள், தட்டையான உலக வரைபடத்தின் மூலம் வாதம் புரிய முயற்சிக்கின்றனர், அல்லது பொருத்தமற்ற விஷயங்களை கையாள முயற்சிக்கின்றனர். இவை போன்ற அபத்தமான வாதங்கள் எழுதப்பட்ட புத்தகங்களை நான் பார்த்திருக்கிறேன். சிலர் நிலப்பரப்பின் அடிப்படையில் கஅபா நடுவில் உள்ளதாக சொல்கின்றனர். இதுவும் மிகவும் அபத்தமானது. இக்கருதுகோளை எந்தக் கணிதம் மூலமும் யாரும் நிரூபிக்க இயலாது.

மேலும், அனைத்து கண்டங்களிலுள்ள நிலப்பரப்புகளும் கடல் நீரில் மிதந்தபடி உள்ளன. அவை பூமியின் உருகிய மையப்பகுதிக்கு மேல் மிதக்கிறது. அவை அனைத்தும் குறிப்பட்ட காலத்திற்கு இடம் பெயர்ந்து மாறுபவை. அப்படி புலம் பெயரும்போது, அந்நிலப்பரப்பின் மையப்பகுதியும் சேர்ந்தே மாறிவிடும். கஅபாவானது பூமியின் மையப்பகுதியில் உள்ளதாக யார் சொன்னாலும், அவர் தேவையில்லாத கருதுகோளை நிரூபிக்க முயற்சிக்கிறார்.

இவ்வாறு டாக்டர் காலித் சவுகத் அவர்கள் பதில் அளித்துள்ளார். எனவே பூமியின் மேற்பரப்பில் மத்தியப் பகுதி என்று எந்த இடத்தையும் வரையறுக்க முடியாது என்று தெளிவாக நிரூபனமாகி விட்டது.

 


 


 

 


 

Visit : www.mooncalendar.in

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved