முதல் பக்கம்

வீடியோ

ஆய்வுகள்

கட்டுரைகள்

வரலாறு

இஸ்லாம்

தமிழ் குர்ஆன்

   

 

Go to Index                   


 

பீஜேயின் கருத்துக்களை ஆய்வுசெய்ய பிறைவாசிகள் தயாரா?

ததஜ சகோதரர்களே!, அண்ணன் பீஜே ஆரம்ப காலத்தில் ஊருக்கு ஊர் பிறைபார்த்து பெருநாள் கொண்டாடுங்கள் என்ற கொள்கையைச் சொன்னபோது அதுதான் நபிவழி என்று நம்பி பின்பற்றினீர்கள். பின்னர் சர்வதேசப் பிறைதான் சரி என்ற கொள்கைக்கு அண்ணன் மாறிய போதும் அதுவே நபிவழி என்று நம்பி பின்பற்றுனீர்கள். அப்போது இந்த ததஜ பிறைவாசிகள் எங்கே இருந்தார்கள்? என்று நமக்கு தெரியவில்லை.

அதன் பிறகு திடீரென்று அண்ணன் பீஜே அவர்கள் யூடேர்ன் (U-Turn) அடித்து உள்ளூர் பிறைதான் சரி என்று சொன்னபோது இயல்பாகவே அதுவும் நபிவழி ஆகிப்போனது. அடுத்து மாவட்ட பிறைதான் நபிவழி என்று அண்ணன் திருத்திக் கூறியபோது, அது மீண்டும் நபிவழி என்ற அந்தஸ்த்துக்கு உயர்த்தப்பட்டது. அப்போதும் இந்த சிந்தனை சிற்பிகளான ததஜ பிறைவாசிகள் எங்கே இருந்தார்கள்? என்பது தெரியவில்லை.

திடீரென்று ஒருநாள் மாவட்டம், மண்டலம் போன்ற எல்லைக் கோடுகளை அழித்துவிட்டு, 'மாநிலம் அளவு பிறை' இதுதான் நபிவழி என்று சகோதரர் பீஜே அவர்கள் உறுதியாக அறிவித்தார். அதுவரை சொல்லி வந்ததெல்லாம் நபி வழியில்லை, மாறாக புதிதாக தமிழகப்பிறை என்று சொல்லியதுதான் நபிவழி என்று பிரச்சாரம் செய்தார். மறுபேச்சு ஏதும் பேசாமல் ததஜவினர் அனைவரும் அதுவும் நபிவழி என்று உறுதி செய்தனர். இப்படி அண்ணனின் வழியை பின்பற்றுவதற்குப் பெயர்தான் நபிவழியா? நபிவழி என்பது திரைசீலை அல்ல. பழையதானவுடன் மாற்றிவிட்டு புதியதை தொங்க விடுவதற்கு.

இன்னும் ததஜவின் பிறைவாசி தொண்டர்கள் ஹிஜ்ரி காலண்டர் ஷியாக்களின் காலண்டர், அது ஒரு யூதக்காலண்டர் என்று சமூக ஊடகங்களில் பேசியும், எழுதியும் வருகின்றனர். அவர்களை வீர சிப்பாய்களாய் வர்ணிக்கும் போக்கு ததஜவினரிடையே தொடர்கிறது. அந்த வீரசிப்பாய்களை நோக்கி சில அடிப்படையான கேள்விகளை எழுப்பும் முகமாக பீஜேயின் கருத்துக்களை ஆய்வுசெய்ய பிறைவாசிகள் தயாரா? என்ற இந்த ஆக்கம் அமைகிறது.

1. தமிழகம் என்ற ஒரு மாநில எல்லைக்குள்தான் பிறைபார்த்து நோன்பு நோற்க வேண்டும் என்பதற்கு ததஜ பிறைவாசிகளிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?

2. தமிழகம் அல்லாத பிற இடங்களில் இருந்து பிறை பார்க்கப்பட்ட தகவல் வந்தால் அதை புறக்கணித்து விட்டு, நமது மாநில எல்லையில் பிறை தென்பட வேண்டும் என்பதற்காக நோன்பை பிற்படுத்த வேண்டும் என்பதற்கு ததஜ பிறைவாசிகளிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?

3. ஐம்பது மைல் தொலைவில் இருக்கும் ஒரு ஊரில் பிறை கண்டால் அதை ஏற்றுக் கொள்ளாமல், ஐந்நூறு மைலுக்கு அப்பால் தென்படும் பிறையை ஏற்றுக் கொள்வதற்கும் ததஜவிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?

4. தமிழக தவ்ஹீத் ஜமாத்திற்கு (TNTJ) மாநிலப்பிறை எனில் தங்கள் கிளை அமைப்பான இலங்கை தவ்ஹீத் ஜமாத்திற்கு (SLTJ) இலங்கை தேசியப்பிறை. இதை எந்த ஆதாரத்தை வைத்து முடிவு செய்தீர்கள்? ஒரே கொள்கையை பின்பற்றுபவர்களுக்கு இடையிலேயே பிறை விஷயத்தில் ஒரு இணக்கமான கொள்கை முடிவை எடுக்க முடியாமல் ஏன் முரண்படுகிறீர்கள்?

5. சந்திரன் மேற்கில் உதிக்கிறது. மேற்கு திசையில்தான் சந்திரனை பார்ப்பீர்கள். சந்திரன் (பிறை) மேற்கில் உதித்து கிழக்கில் மறைகிறது என்று சகோதரர் பீஜே சொல்வதை எந்த விஞ்ஞான அடிப்படையை வைத்து நிரூபிக்கப் போகிறீர்கள்?

6. நாம் கண்ணால் பார்ப்பது மூன்றாவது பிறைதான். நபி (ஸல்) அவர்கள் மூன்றாவது பிறையைத்தான் முதல் பிறை என்று பீஜே அவர்கள் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார். ஆக ததஜ பிறைவாசிகள் உட்பட அனைத்து ததஜவினரும் மூன்றாவது பிறையை பார்த்துவிட்டுதான் மாதத்தின் முதல் நாளை தொடங்குவதாக பீஜே கூறுகிறார். இதற்கு வஹியை மட்டும் பின்பற்றும் ஒரே கூட்டத்தின் வீர சிப்பாய்களிடம் என்ன பதில் இருக்கிறது?

7. பிறை விஷயத்தில் நிறைய குழப்பங்கள் உள்ளன. காரணம் பிறை சம்பந்தமான ஹதீஸ்களும், அது சம்பந்தமான சான்றுகளும் ஒருங்கிணைக்க முடியாமல் உள்ளன. லூனார் (Lunar) என்றாலே கிறுக்கு என்று பொருள். பிறை என்றாலே கிறுக்குப் பிடிப்பது போன்றுதான் உள்ளது. எனவே யாராலும் நூறு சதவிகிதம் நிலை நாட்ட முடியாது என்றும் பீஜே கூறியுள்ளார். ஆக ததஜ பிறைவாசிகள் எத்துனை கட்டுரைகளை எழுதி பரப்பினாலும் அவர்களால் நூறு சதவிகிம் நிலைநாட்டிட முடியாது என்கிறார் பீஜே. இதற்கு ததஜ பிறைவாசிகள் என்ன பதிலை வைத்துள்ளார்கள்.

8. பிறை சம்பந்தமாக எந்த ஒரு நிலைப்பாட்டிலும் 4 கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மிச்சமிருக்கும். எந்த நிலைப்பாட்டில் குறைந்த கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் இருக்கிறதோ அந்த நிலைப்பாட்டிற்கு சென்றுவிடுவது சிறந்தது என்று பீஜே சொல்கிறார். ஆகையால் பிறைவாசிகள் நான்கு கேள்விகளுக்கு விடை தெரியாமல் உள்ளதாக பொருள்படுகிறது. அது என்னென்ன கேள்விகள் என்பதை அறிந்து விட்டீர்களா பிறைவாசிகளே?

9. தலைப்பிறை சவுதியில் உதிக்கிறது என்றால் சவுதியிலிருந்து பிறை ரிவேஸ்ல வராது. காரணம் அது மேற்கு உதிப்பதால் நம் தலைக்கு நேராக வருவதற்கு 21:30 மணிநேரம் ஆகும் என்று பீஜே சொல்கிறார். ஒருவேளை இது பூமியின் குறுக்கு வட்டக் கோட்பாடாக இருக்கலாம். பூமியின் பெரிய வட்டக் கோட்பாடு (Great Circle) என்று ததஜ பிறைவாசிகள் எழுதி பிரச்சாரம் செய்வதால் இதற்கும் என்ன பதிலைச் சொல்கிறார்கள் என்று பார்ப்பபோம்.

10. பிறை பிறந்தால்தான் இரவு ஆரம்பிக்கிறது. இரவில்தான் நாள் ஆரம்பிக்கிறது என்கிறார் பீஜே. மேலும் முதல் பிறை சிலநேரம் 20 நிமிடம் தெரியும், சில நாளில் 35 நிமிடங்கள் தெரியும், சில வேளை 5 நிமிடங்கள்கூட தெரியும் என்கிறார். ஒவ்வொரு நாளும் சந்திரன் எந்தெந்த நேரத்தில் உதயமாகிறதோ அந்தெந்த நேரத்திலிருந்து ஒருநாளை தொடங்கிட முடியுமா? என்பதையும் ததஜ வீர சிப்பாய்கள் அண்ணனுக்கு விளக்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

அத்தோடு ஒரு நாள் என்பது மஃரிபிலிருந்து தொடங்குகிறது என்றும் அண்ணன் பிரச்சாரம் செய்துள்ளார். அதை ததஜவினர் அதை மார்க்கம் என்று நம்பியுள்ளனர். எனவே ஒரு நாளுக்குரிய ஐந்துவேளை கடமையான தொழுகைகளில் மஃரிபு தொழுகையை முதல் தொழுகையாக அமைத்து, ததஜ மர்கஜ்களில் உள்ள தொழுகை கால அட்டவணையை 'மஃரிபு, இஷா, ஃபஜ்ரு, லுஹர், அஸர்' என்று மாற்றி எழுதுங்கள்.

11. சூரியக் (ஆங்கிலக்) காலண்டர் அடிப்படையில் வரும் 365 என்ற வருடக் கணக்குதான் சரியானது. சந்திரக் கணக்கீடு மாதத்தைத்தான் அளவிட முடியும் என்றும் பீஜே பேசியுள்ளார். ஆனால் ததஜ பிறைவாசிகளோ சந்திரனை வைத்து ஒரு காலண்டரை தயாரிக்கவே முடியாது என்கின்;றனர். கடந்த 1752 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதிக்குப் பின்னர் 3-ஆம் தேதி என்று வருவதற்கு பதிலாக, 14-ஆம் தேதி என்று ஏன் ஆக்கப்பட்டது? 11 நாட்கள் ஏன் கூட்டப்பட்டது? அவ்வளவு துல்லியமான வருடக்கணக்கா இந்த கிருஸ்தவக் காலண்டர்? என்பதையும் ததஜ பிறைவாசிகள் சொல்லட்டும்.

12. மேலும் உமர் (ரழி) அவர்களும் ஸஹாபாக்களும் இஸ்லாமிய ஆண்டு கணக்கீட்டை ஹிஜ்ரத்திலிருந்து ஆரம்பித்தது பொருத்தமில்லாதது. நபி (ஸல்) அவர்களின் நுபூவத்திலிருந்துதான் ஆரம்பித்திருக்க வேண்டும் என்று பீஜே பேசியுள்ளர். ஆக ஹிஜ்ரி காலண்டர் சரியில்லை நூபூவத் காலண்டர் போடலாம் என்று பச்சைக்கொடி காட்டியுள்ளார் பீஜே. ததஜ பிறைவாசிகளே என்ன செய்யப் போகிறீர்கள்? நுபூவத் காலண்டர் தயாரிக்கப் போகிறீர்களா? அல்லது பீஜே அறிவில்லாமல் சொல்லி விட்டார் என்று கூறப் போகிறீர்களா?

ததஜ அன்பர்களே..!, பிறை, விஞ்ஞானம், கிப்லாவின்திசை, தேதிக்கோடு, தொழுகை நேரம் என்று அகழ்வாராய்ச்சி செய்து பக்கம் பக்கமாக வரைந்து தள்ளுவதற்கு முன்னர், உங்கள் இயக்கத்தின் அசல் பிறை நிலைப்பாடான தமிழகப்பிறைக்கு ஆதாரத்தை முன்வையுங்கள். பிறை சம்பந்தமாக பீஜேயின் கருத்துக்களை ஆய்வுசெய்ய முன் வாருங்கள். உங்கள் கொள்கையிலுள்ள ஓட்டைகளை அடைப்பதற்கு, இந்த உலகில் உற்பத்தியாகும் ஒட்டுமொத்த சிமெண்டு மூட்டைகளை கொண்டு வந்து கொட்டினாலும் முடியாது என்பதே உண்மை. எனவே ததஜ பிறைவாசிகளே ஹிஜ்ரி நாட்காட்டியை குறைசொல்லி, ஹிஜ்ரி கமிட்டியினர் மீது பொய்யுரைப்பதை விடடுவிட்டு சற்று நிதானப்படுங்கள், சத்தியத்தை உணர முன் வாருங்கள் என்று உபதேசிக்கிறோம்.

கிப்லா குறித்து ததஜ பிறைவாசிகளுக்கு நாம் அளித்துள்ள பிற விளக்கங்களையும் அவசியம் பார்வையிடவும்.

தேதிக்கோட்டை மாற்றத் துடிக்கும் ததஜவின் கனவு நிறைவேறுமா?

கிப்லாவை மாற்றியது யார்?

கிப்லா சம்பந்தமான குர்ஆன் வசனங்கள் கூறுவது என்ன?

பூமியின் மேற்பரப்பில் மத்தியப் பகுதி என்று வரையறுக்க முடியுமா?

பூமியின் மையப்பகுதி மக்கா நகரமா? சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா? 


 


 

 


 

Visit : www.mooncalendar.in

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved